Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மா‌ர்‌ச் மாத எண் ஜோதிடம் : 3, 12, 21, 30

க.ப. ‌வி‌த்யாதர‌ன்

Webdunia
வெள்ளி, 29 பிப்ரவரி 2008 (19:09 IST)
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் முற்பகுதியை காட்டிலும் பிற்பகுதி சிறப்பாக இருக்கும். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். கணவன் - மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும்.

குடும்பத்தில் வழக்கமான அமைதி உண்டு. பணவரவு தேவையான அளவு இருக்கும். மனைவியுடன் நிலவி வந்த பனிப்போர் நீங்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு. வயிற்று வலி, தொண்டை புகைச்சல் நீங்கும். திடீர் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். வெளிவட்டாரன் மகிழ்ச்சி தரும். நண்பர்களைச் சந்தித்து பொழுதைக் கழிப்பீர்கள்.

கன்னிப்பெண்கள் சிந்தித்து செயல்படுவது நல்லது. பெற்றோரின் ஒத்துழைப்பு கிட்டும். குலதெய்வப் பிராத்தனைகள் நிறைவேறும். மற்றவர்களை நம்பி அதிரடி முடிவுகள் எடுக்க வேண்டாம். புது வாகனம் வாங்குவீர்கள். மாணவர்களின் நினைவுத்திறன் பெருகும். உறவினர்களிடம் ஒருபடி விலகி நிற்பது நல்லது.

வியாபாரத்தில் அபிவிருத்தி அடையும். மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். கூட்டுத்தொழிலில் நிதானம் தேவை. வேலையாட்களை அனுசரித்து போவீர்கள். எலக்ட்ரிகல், இரும்பு, உணவு வகைகளால் லாபம் உண்டு.

உத்யோகத்தில் உங்கள் பணிகளில் அக்கறை காட்டுங்கள். தனி நபர் விமர்சனத்தை தவிக்கவும். சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும். அலைச்சல், செலவு வந்து செல்லும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் - 3, 9, 12, 18, 21, 27, 30
அதிர்ஷ்ட எண்கள் - 3, 9
அதிர்ஷ்ட நிறங்கள் - பி‌ஸ்தாபச்சை, ஊதா
அதிர்ஷ்ட கிழமைகள் - திங்கள், புதன்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments