Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3,12,21,30

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2007 (13:14 IST)
3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் அதிஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.

கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். குடுமப்த்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவது நல்லது. பழைய கடனை அடைக்க முற்படுவீர்கள். சுக்ரன், புதன் வலுவாக இருப்பதால் பபப்புழக்கம் அதிகரிக்கும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். செவ்வாய் ராசியில் நிற்பதால் உடல் நலம் பாதிக்கும். மருத்துவச் செலவுகள் வந்து போகும். சகோதர வகையில் மதிப்பு கூடும். பயணங்களால் நன்மை பிறக்கும். நட்பு வட்டாரம் விரியும். உறவினர்களிடையே அனுசரித்து போவீர்கள்.

வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். கன்னிப்பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். சுப காரியங்கள் ஏற்பாடாகும். முன் கோபம் குறையும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் நிலவி வந்த பிரசனைகளுக்கு தீர்வுகாண்பீர்கள். சங்கம், டிரஸ்ட் இவற்றில் சேருவீர்கள். மாணவர்களின் நினைவாற்றல் பெறுகும். விரும்பிய கோர்ஸில் சேருவார்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. வேலையில்லாதவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். வீடு, வாகன வசதி பெறுகும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் நிலவி வந்த கசப்புணர்வு நீங்கும். சோர்வு, அலைச்சல் அவ்வப்போது வந்துபோகும்.

வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். நீசப் பொருட்கள், உணவு வகைகளால் ஆதாயம் உண்டு. அரசுக் கெடுபிடிகள் குறையும். கூட்டுதொழிலில் பங்குதாரர்களிடம் அனுசரித்து போவீர்கள். பாக்கிகள் வசூலாகும். அதிரடி மாற்றங்களை நிகழ்த்துவீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சம்பளம் கைக்கு வரும். எதிலும் ஏற்றமான மாதமிது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments