Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது திருமணம் செய்யும் போது மனப் பொருத்தம் முக்கியமா? ஜாதகம் முக்கியமா?

Webdunia
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.விதயாதரன்:

பொதுவாக முதல் திருமணம் தோல்வியில் முடிந்தாலும், 2வது திருமணம் செய்யும் போது மனப்பொருத்தம் மட்டுமல்லாது, ஜாதகப் பொருத்தத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். சில ஜாதகங்களுக்கு எத்தனை தாரம் வந்தாலும் தங்காத நிலை காணப்படும் என்பதால் இதனைக் கூறுகிறேன்.

கடந்த வாரத்தில் என்னிடம் வந்த ஜாதகருக்கு 4 திருமணம் முடிந்து விட்டது. தற்போது 5வது முறையாக அவருக்கு திருமணம் முடிக்கலாமா என்று கேட்க அவரது பெற்றோரும், அவரும் என்னிடம் வந்திருந்தனர்.

அவரது தந்தை கூறுகையில், “முதல் திருமணத்தின் போதுதான் பொருத்தம் பார்த்தோம். அதற்குப் பின்னர் நடத்திய திருமணங்களுக்கு பொருத்தம் பார்க்கவில்லை. மனம் ஒத்துப் போனதால் திருமணம் நடத்தினோம். ஆனால் அவையும் நிலைக்கவில்ல ை ” என்று கவலைப்பட்டார்.

இந்த ஜாதகரைப் பொறுத்தவரை முதல் திருமணம் பொருத்தம் பார்த்து செய்தாலும், அது தோல்வியில் முடிந்ததால் ஜாதகப் பொருத்தம் மீதான மதிப்பு, நம்பிக்கையை அவரது குடும்பத்தினர் இழந்து விட்டனர். அதனால் அடுத்தடுத்த திருமணங்களுக்கு பொருத்தம் பார்க்கவில்லை. ஆனால் இது தவறான முடிவாகும்.

இரண்டாவது திருமணம் செய்வதாக இருந்தாலும் ஜாதகப் பொருத்தம் பார்ப்பது அவசியம். பொதுவாக மறுமணம் என்றாலே கிரகங்களால் ஏற்பட்டுள்ள தோஷங்களின் சதவீதம் குறையும் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

2 வது திருமணம் செய்யும் போது வரன்களின் தசா புக்தியை பார்ப்பது அவசியம். மேலும் திருமணம் செய்து கொள்ளப் போகும் நபருக்கு குழந்தை உள்ளதா? என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அப்படி இருக்கும்பட்சத்தில் குழந்தையின் ராசிக்கும், வரக்கூடிய பெண்ணின் ராசிக்கும் முரண்பாடு/பகை இருக்கக் கூடாது. அதற்கேற்றவாறு பொருத்தம் பார்த்து 2வது திருமணத்தை நடத்த வேண்டும்.

குழந்தை இல்லாதபட்சத்தில் வரன்களுக்கு இடையிலான பொருத்தம் இருந்தாலே திருமணம் செய்யலாம். முக்கியப் பொருத்தங்கள் மட்டும் இருந்து, இதர பொருத்தங்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் ஜாதகமே பார்க்காமல் மனப் பொருத்தத்தை மட்டும் வைத்து 2வது திருமணத்தை முடித்து விட்டோம் எனக் கூறுவது தவறாகும்.

ஒருவேளை ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் நிச்சயம் செய்து விட்டாலும், திருமணம் நடைபெறும் தேதியை, தம்பதிகளுக்கு தாராபலன், பஞ்சகம் வருவது போல் நிர்ணயிப்பது பலன் தரும்.

ஒரு சிலருக்கு, 2வது திருமணத்தை மலைக் கோயில்கள் அல்லது கடல், ஆற்றோரம் உள்ள ஸ்தலங்களில் வைத்துக் கொள்ளுங்கள் என அறிவுரை கூறுவது உண்டு. அப்போதுதான் அந்த ஜாதகருக்கு உள்ள தோஷம் நிவர்த்தியாகும்.

இதேபோல் இரு தரப்பினரின் குடும்பத்தினர் எதிர்த்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பர். குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்வதால், பெற்றோர்-உறவினரின் சாபத்திற்கு ஆளாக நேரிடும். இந்த சாபங்களில் இருந்து தப்பிக்கவும் திருமணத்தை கோயிலில் வைத்துக் கொள்வது நல்லது.

திருமணம் காரணமாக ஒரு சில குடும்பங்களில் மாமன், மைத்துனன் வகையில் தகராறு ஏற்பட வாய்ப்புண்டு. உதாரணமாக அந்த ஜாதகருக்கு 4 தாய்மாமன் உள்ளனர். அவர்கள் அனைவருக்குமே பெண் உள்ளது. அதில் 2வது தாய்மாமனின் பெண்ணின் மேல் ஜாதகருக்கு ஈர்ப்பு இருந்தது. இருதரப்பினரும் திருமணம் நிச்சயம் செய்தனர்.

இதனால் மற்ற 3 மாமன்களும் கடும் அதிருப்தியடைந்தனர். திருமணத்திற்கே வரமாட்டோம் எனக் கூறி விட்டனர். திருமணத் தேதியை நிச்சயிப்பதற்காக என்னிடம் வந்த மணமகன் தரப்பினர் குடும்பத் தகராறு பற்றிக் கூறினர்.

இதையெல்லாம் கருத்தில் கொண்ட நான், திருமணத்தை கோயிலில் வைத்துக் கொள்ளுங்கள், அதுதான் மணமக்களுக்கு நல்லது என வலியுறுத்தினேன். இறுதியாக கோயிலில் திருமணம் நடந்தது. மனவருத்தம் அடைந்த 3 தாய்மாமனும் இறுதி நேரத்தில் திருமணத்திற்கு வந்ததாக பின்னர் அந்த மணமகன் என்னிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்தார்.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments