Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலமெல்லாம் காமுகனாய்...

Webdunia
திங்கள், 30 ஜூன் 2008 (14:06 IST)
சிலர் இருக்காங்க. அதாவது, தங்கை முறை பார்க்காமல் புணரக்கூடியவர்கள் இருக்காங்க. மகள்னு கூட பார்க்காம, அதாவது தொடர்பில்லைன்னாலும், மனசுக்குள்ள எண்ணத்தை ஓடவிட்டு பார்க்கிறவங்களும் இருக்காங்க. அதெல்லாம் எப்படீன்னு பார்த்தீங்கன்னா, சுக்ரன், செவ்வாய் இதோட ராகுவும் சேர்ந்திருக்க, இந்த மூன்று கிரகங்களை சனி பார்த்தால் காமுகனாக எல்லா நேரத்திலேயும் இருப்பாங்க. இவங்களுக்கெல்லாம் பார்த்தீங்கன்னா, மனைவி கூட நோயாளியா இருப்பாங்க. அதனால தனிப் பாதை அமைச்சிக்குவாங்க. இந்த மாதிரி காலமெல்லாம் காமுகனா இருக்கிற கோளமைப்பையும் பார்க்கிறோம்.

சிலருக்கு முடிஞ்ச வரைக்கும் ஆலோசனை வழங்கிறேன். பொதி காளை ஜாதகமா இருக்கு. கொஞ்சம் பார்த்து நடந்துக்குங்க. இல்லை பாதிப்பு வரும். அதற்கான திசை ஆரம்பித்து இருக்கிறது. என்ன தம்பி பண்றது நானா தேடிப் போவலனாலும், தானா வருது. இல்லைங்க, இதுவர நடந்த திசை வேற, இப்படி ஆரம்பிச்சிருக்கிற திசை வேற, அதனால பார்த்து நடந்துக்குங்கனு சொல்லி அனுப்பினேன்.

நட்பில் காமம் ஒரு குறுக்கீடா?

ஒரு கணவன், மனைவி இருக்காங்க. நட்பா குடும்பத்திற்கு வருபவர்கள், உதாரணத்திற்கு, கர்நாடகத்துல பா.ஜ.க. எம்.எல்.ஏ.வோட மனைவி, அவங்க குடும்பத்திற்கு வருகிற நண்பரோட தொடர்பு ஏற்பட்டு அந்த பெண் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு சென்றுவிட்டது. அதைப் பற்றி...

வித்யாதரன ்: அதாவது பொதுவாக புதன் நண்பர்களுக்கு உரிய கிரகம். 7ஆம் வீட்டு அதிபதியுடன் புதன் சேர்ந்திருந்தா நண்பர்களென்று யாரையும் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வரக்கூடாது என்று எங்க அப்பா சொல்லியிருக்காங்க. அப்படி அழைச்சிக்குட்டு வந்தா அவங்க மாறுவாங்கன்னு என்று அவர் கூறியுள்ளார்.

விருத்தாச்சலம் பக்கத்துல காட்டுமன்னார்குடி என்ற இடத்தில் சில நிகழ்வுகளெல்லாம் நடந்தது. பெரிய குடும்பம் சின்ன வயசுல இருந்தே ஒன்னா படிச்சு, ஹாஸ்டல்ல, காலேஜ்ல ஒன்னா இருந்து படிச்சு வந்தவங்க. ஆனா வேற மாதிரி ஆயிடுச்சு. ஏன்னா, 7ஆம் அதிபதியோட புதன் இருந்தா இந்த மாதிரி எல்லாம் ஆகும்.

இன்ஸ்பெக்டர் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவரோட ஜாதகத்தைப் பார்த்தேன். கெஸ்ட் எல்லாம் நிறைய பேர் வீட்டிற்கு வருவாங்களான்னு கேட்டேன். என்னோடு படிச்ச பசங்க எல்லாம் வருவாங்க, போவாங்கன்னு சொன்னார்.

சரி, இதுக்கப்புறம் அதெல்லாம் வேண்டாம். வீட்டிற்கு யாரும் வராத மாதிரி பார்த்துக்குங்கன்னு சொன்னேன். அதுக்கு அவர்,

எனக்கு ·ப்ரெண்ட்ஸ்தான் பலமேன்னு சொன்னார். அதெல்லாம் சரிங்க, இப்ப உங்க திசைப்படி உங்க வீட்டிற்கு சில பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கிறது. ஏன்னா உங்க ஜாதகப்படி சப்தமாதிபதியோட புதன் சேர்ந்து அந்த திசை வருகிறது. அதனால, தன் தாரம் கணவரோட நண்பரால் பாதை மாற வாய்ப்பிருக்கிறது. உங்க ஜாதகப்படி உங்க நண்பர்கள் இந்த செவ்வாய் திசை அல்லது புதன் திசை இருக்கிற வரைக்கும் மட்டமாக நடந்து கொள்வார்கள்.

யாரும் அப்படி இருந்தாலும் என் மனைவி சரியா நடந்து கொண்டால்தானே கற்பு என்று அவர் கூறினார். எல்லாம் சரிங்க, உங்க மனைவி எதுவும் செய்யவில்லை. ஆனால், திடீரென்று உங்கள் நண்பர் உங்கள் மனைவியின் கையைப் பிடித்து இழுத்துவிட்டார் என்றால் என்ன செய்வீர்கள். அதனால, இதெல்லாம் வேண்டாம். தேவையில்லாத பிரச்சனையை தவிர்த்திடுங்கள் என்று சொன்னேன்.

நடப்பது நடந்தே தீரும்னு இருக்கு இல்லையா? இப்ப நீங்க தவிர்க்கிறது பற்றி பேசிக்கிட்டிருக்கீங்க.

நடப்பது நடந்தே தீரும்கிறது உண்மைதான். “உதித்தபோது விதித்தது ஒருநாளும் மாறாத ு ”ன்னு எங்க தாத்தா சொல்வார். ஆனால், அதேபோலதான் “விதியை மதியால் வெல்லலாம ் ”னு சொல்வாங்க. இப்ப நோய் வருகிறது. டாக்டரை பார்க்கிறாங்க, மருந்து, மாத்திரை சாப்பிடறாங்க. அதேபோலதான், கர்மா, இறந்தகால, நிகழ்கால நிகழ்வுகள் ஜோதிடம் மூலமா தெரிந்து கொள்கிறோம். தெரிந்துகொண்டு தவிர்த்துவிட முடியும். அது உண்டு. ஆனால், அது எல்லோருக்கும் முடிவதில்லை.

மீஞ்சூர்ல ஒருத்தர் இருக்காரு. அவருக்கு இரண்டு பெண்கள். முதல் பெண்ணை அழைத்து வந்து காண்பித்தார். கொஞ்சம் பார்த்துக்குங்க, இன்னும் 6 மாதத்தில் இந்த பொண்ணு ஓடிவிடும்னு சொன்னேன். உடனே சொந்தக்காரப் பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாரு. அவங்கள தேனிலவுக்கு அனுப்பி வச்சிட்டாரு. அந்த நேரத்துல அந்த பொண்ணு லவ் பண்ண பையன் நாலு பேரோட வந்திருக்கான். அப்ப சொன்னாரு, நீங்க சொல்லலைன்னா என் பொண்ணு ஓடிப் போயிருக்கும் சார். அந்த பையனுக்கு எடுத்துச் சொல்லி அனுப்பி வச்சிடுங்க. பொண்ணு இதையெல்லாம் எதுவும் சொல்லவில்லை. இது நாங்க எடுத்த முடிவுதான். அப்படின்னு சொல்லி அனுப்பிச்சிட்டார்.

கொஞ்ச நாள் கழிச்சு சோகமா வந்தாரு. இரண்டாவது பெண்ணோட ஜாதகத்தை காட்டினார். இரண்டு மாதத்திற்கு முன்பே வந்திருக்கக் கூடாதா என்று கேட்டேன். ஆமாங்க, தப்பு பண்ணிட்டேன். கம்பெனியில வேலை செய்யற பியூனோட ஓடிப்போயிடுச்சிங்க என்று கூறினார்.

இப்ப பாருங்க, முதல் பெண்ணோட ஜாதகத்தைப் பார்த்துச் சொன்னேன், ஆனால் இரண்டாவது பெண்ணோட ஜாதகத்துல தப்பிக்க முடியல. இரண்டு பொண்ணுல ஒன்னதான் காப்பாத்த முடிஞ்சது. ஒன்னு தலையெழுத்துன்னு சொல்வோம், இல்லை அந்த மாதிரி ஆயிடுச்சு என்று கூறுவோம்.

ஒரே குடும்பத்துல எப்படி ரெண்டு பொண்ணுக்கும் அந்த மாதிரி விதி இருக்கிறது.

சில நேரங்களில் இருக்கும். லக்னத்தில் 7ஆம் இடம், 8ஆம் இடத்தில் கடினமான கிரகங்கள் அமைந்தால், நாமே பிள்ளைகளுக்கு லிபரலாகவும் சொல்லி விளக்கலாம். கொஞ்சம் கட்டுப்பாடோட இரும்மா, நானே நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்லிட்டாலே போதும், பிரச்சனையே வராது. நாமே ஒரு லிஸ்ட் போட்டு குடுத்துட்டா, மோசமான, படப்பறிவில்லாதவங்களோட போறத தவிர்க்கலாம். ஓடறது ஓடறதுதான். அது நல்லவங்களோட போன பிரச்சனையில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?