எண் ஜோதிடம் என்பது ஒரு ஊறுகாயைப் போலத்தான். இதில் பிரதானம் என்பது கிரகம்தான். எண்கள் என்பவை நம்மால் உருவாக்கப்பட்டவை.
ஆனால் கிரகங்கள் என்பவை தானாக உருவானவை. அவற்றுக்கென சில தன்மைகள் உள்ளன. பலரும் தற்போது எண் ஜோதிடத்தை பிரதானப்படுத்தி வருகின்றனர். எண்களை இயக்குவதே கிரகம்தான்.
webdunia photo
WD
அதாவது 1 என்றால் சூரியனின் இயக்கம், இரண்டை சந்திரன் இயக்குகிறது, 3ஐ குரு இயக்குகிறது, 4ஐ இயக்குவது ராகு, 5ம் எண்ணை இயக்குவது புதன், 6ஐ இயக்குவது சுக்கிரன், 7வது கேது, 8வதிற்குரியது சனி, 9ஐ இயக்குவது செவ்வாய்.
இந்த ஒன்பது எண்களுக்கும் ஒன்பது கிரகங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இது பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ளேன். எண் ஜோதிடம் என்பதை மட்டும் பார்க்காதீர்கள். ஜோதிட அறிவுடன் எண் ஜோதிடத்தையும் அணுகுங்கள்.
உதாரணத்திற்கு ஒருவர் 3ஆம் எண்ணில் பிறந்திருக்கிறார். உடனே ஜோதிடம் தெரியாத எண் ஜோதிடரிடம் சென்றால், அவர் 3ம் எண்ணுடன் தொடர்புடைய 9ம் எண்ணில் பெயர் அமையுமாறு ஒரு பெயரைச் சொல்கிறார்.
3 ஆம் எண்ணுக்குரிய கிரகம் நீச்சமடைந்து இருந்தால் இந்த 3ஆம் எண் அவருக்கு எந்த வகையிலும் உதவி புரியாது. எனவே எண்ணுக்குரிய கிரகம் அவரது ஜாதகத்தில் எப்படி இருக்கிறது என்பதை முதலில் பார்க்க வேண்டும்.
நிறைய எண் ஜோதிடர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், பிறந்த தேதியை சொன்னால், ராசியான எண், ராசியான தேதி, ராசியான வயது என்று எல்லாவற்றையும் குறிப்பிடுகிறார்கள்.
ஆனால் அவரது ரேகையை பார்க்க வேண்டும். குரு மேடு நன்றாக இருக்கிறது. குரு ஜாதகத்தில் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.
நிறுவனத்திற்கு பெயர் வைக்கும் போது ஜோதிடத்தையும் பார்த்து பெயரைக் குறித்துக் கொடுத்தால் நன்றாக வரும். ஆனால் பல எண் ஜோதிடர்களுக்கு ஜோதிடமே தெரிவதில்லை.
ஜோதிட ஞானம் உள்ளவர்கள் எண் ஜோதிடம் செய்யும்போது அந்த ஜோதிடம் வெற்றி அடையும்.
இதைப்போலவே, மகத்தில் பிறந்தவர்கள் ஜகத்தை ஆள்வார்கள், 5ல் திருமணம் முடித்தால் பிரிந்துவிடுவார்கள், 7ல் பிறந்தவர் சாமியாராவார் என்று சொல்வதில் எல்லாம் எந்த அடிப்படையும் இல்லை.
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கிரக அமைப்புகள்தான் காரணம். அந்த கிரக அமைப்பு வந்தால்தான் அது அது நடக்கும்.
ஏ, பி, சி, டியில் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு எண் கொடுக்கப்பட்டு பெயரில் எண் கணிதம் காணப்படுவது பற்றி?
ஏ என்றால் 1, பி என்றால் 2, சிக்கு 3, டிக்கு 4 என்று வைத்து நமது பெயரை எழுதி அதன் கூட்டுத் தொகைக்கு எண் கணிதம் சொல்வதுதான் எண் கணிதத்தின் மற்றுமொரு முறை.
இதில் ஏன் ஆங்கில எழுத்துக்களுக்கு மட்டும் எண் கணிதம் பார்க்கப்படுகிறது என்று ஆராய்ந்ததில், எந்த மொழி அதிகளவில் பயன்படுத்தப்படுகிறதோ அந்த மொழிக்கு சக்தி அதிகம்.
பலராலும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஆங்கிலத்திற்கு என தனி சக்தி உண்டு. அதற்காகத் தான் எண் கணிதம் ஆங்கிலத்தை எடுத்துக் கொள்கிறார்கள்.
ஒரு பெயரைக் கூட்டி வரும் கூட்டுத் தொகை 6 என்று வைத்துக் கொண்டால் 6க்குரியவன் சுக்கிரன் அவரது ஜாதகத்தில் வலுவாக இருக்கிறாரா என்பதை பார்த்து அவ்வாறு இருந்தால் மட்டுமே 6ம் எண்ணில் பெயர் அமைக்க வேண்டும்.