வரும் 16.11.2007 வெள்ளிக்கிழமை அதிகாலை 4.24 மணிக்கு விருச்சிக ராசியில் இதுவரை இருந்து வந்த குரு, தனுசு ராசிக்கு இடம்பெயர்கிறார். இதனால் நமது நாட்டில் குறிப்பிடத்தக்கவாறு என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று வினவியதற்கு ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் விளக்கமளித்துள்ளார்.
1. நீதித்துறை வலுவடையும். அரசியல்வாதிகளுக்கு எதிராக நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகள் கடுமையாக இருக்கும். இதனால் சில தலைவர்கள் செல்வாக்கை இழப்பார்கள்.
2. வேதம், சமஸ்கிருதம் படித்தவர்கள் நல்ல பயனடைவார்கள்.
3. பள்ளி, கல்லூரி நடத்துபவர்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும்.
4. ஏழை மாணவர்கள் பயனடையும் விதத்தில் கல்விக் கட்டணங்கள் குறைக்கப்படும் அல்லது மாற்றி அமைக்கப்படும்.
5. கிராமப்புறங்கள், காடு, மலை செழிக்கும்.
6. பழங்குடி மக்கள், நரிக்குறவர்கள் கல்வி கற்று வெளிச்சத்திற்கு வருவார்கள்.
7. உலக நாடுகளோடு போட்டியிடும் அளவிற்கு இந்தியாவின் பொருளாதார வல்லமை அதிகரிக்கும்.
8. இந்தியாவின் வணிகம், ஏற்றுமதி-இறக்குமதி அதிகரிக்கும்.
நீதித்துறை வலுவடையும். அரசியல்வாதிகளுக்கு எதிராக நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகள் கடுமையாக இருக்கும்.
9. வியாபாரிகளுக்கு வருவாயும் இருக்கும். அதே நேரத்தில் லாப-நட்டத்தையும் சந்திப்பார்கள்.
10. கல்வியாளர்கள், அறிவியலறிஞர்கள் அதிகமாகப் புகழ்பெறுவர்.