Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டக் கல்லூரியில் மாணவர்கள் அடிதடி ஏற்பட்டது எதனால்? அதனைத் தடுப்பது எப்படி?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

Webdunia
வெள்ளி, 12 டிசம்பர் 2008 (16:25 IST)
சட்டத்திற்கு உரிய கிரகம் என்றால் அது குரு. ஒருவரது ஜாதகத்தில் குரு சிறப்பாக இருந்தால்தான் அவர் வழக்கறிஞராகத் திகழ முடியும். அதேபோல் சனி நீதிமான் என்பதால், ஒருவர் ஜாதகத்தில் குரு, சனியும் சிறப்பாக அமைந்தால் அவர் நீதிபதி ஆவார்.

அனைத்து சட்டக் கல்லூரிகளுக்கும் உரிய கிரகம் குருவின் ஆளுமைக்குள் உள்ளது. தற்போது குரு சிறப்பான இடத்தில் இல்லாத காரணத்தாலும், அடுத்து பெயர்ச்சி பெறவுள்ள (டிசம்பர் 6இல்) வீடும் (சனி உடையது) சிறப்பாக இல்லாத காரணத்தாலும் சட்டக் கல்லூரியில் மாணவர்களிடையே மோத‌ல் ஏற்பட்டது.
குரு அடுத்த வீட்டிற்கு பெயர்ச்சி பெறுவதற்கு முன்பாகவே, அந்த வீட்டுக்கு செல்வதால் ஏற்படும் பாதிப்புகளை ஏற்படுத்தத் துவங்கியுள்ளதே இந்த மோதலிற்குக் காரணம். ராஜ கிரகங்களுக்கு (குரு, சனி) அடுத்த வீட்டிற்கு உரிய பலன்களை ஒரு மாதம் அல்லது 40 நாட்களுக்கு முன்பாகவே வெளிப்படுத்தும் தன்மை உள்ளது.

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள போது சென்னையில் உள்ள சட்டக் கல்லூரியில் மட்டும் மோதல் ஏற்பட்டது ஏன்? என்று நீங்கள் கேட்கலாம். அதற்கும் காரணம் இருக்கிறது.

சென்னை சட்டக் கல்லூரி அருகிலேயே உயர் நீதிமன்றமும் அமைந்துள்ளது. நீதிமன்றங்கள், நீதிபதி, நீதிக்கு உரிய கிரகம் சனி. தற்போது சனி சிம்மத்தில் உள்ளதாலும், நீதிமன்றங்களுக்கு அருகில் உள்ள இடங்களுக்குப் பாதிப்பு ஏற்படும். இதன் பலனாகவே சென்னை சட்டக் கல்லூரியிலும் மோத‌ல் ஏற்பட்டது.

குரு பெயர்ச்சிக்குப் பின்னர் இதே போன்றதொரு நிலை மலைப்பாங்கான இடங்களில் உள்ள சட்டக் கல்லூரிகளிலும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த கல்லூரி ஆசிரியர்கள் கவனமாக, விழிப்புடன் இருக்க வேண்டும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments