நமது ஜோதிடம் சந்திரனை அடிப்படையாக வைத்தது. சந்திரன் இரண்டரை நாட்களுக்கு ஒரு முறை இடம் பெயர்வான். மேலும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நட்சத்திரம் என்று மாறுபடும்.
எனவேதான் அன்றைய நாளின் நட்சத்திரத்திற்கு ஏற்றபடி நமது குணங்கள் மாறுபடும். சந்திரன்தான் மனோகாரகன்.
எனவே அந்த நாளைய நட்சத்திரத்தின் படிதான் மனநிலை அமையும். எனவே அதன் போக்கில் சென்று அதனை காண வேண்டும்.
கோப உணர்ச்சி வரும்போது?
கோப உணர்ச்சி வரும்போது, அதற்கான காரணத்தையும், என்ன செய்வது என்பதையும் யோசிக்க வேண்டும்.
சிலரை எல்லாம் கோபப்படு என்றே சொல்கிறேன். செங்கல்லை எடுத்து அடித்து இரண்டாக உடைத்துப் போடு. பூவை எடுத்து பிச்சிப் பிச்சிப் போடு என்று சொல்கிறோம். இதனை செய்யும்போது என்னடா மனநிலை சரியில்லாதவர் போல செய்கிறோமே என்று நமக்கேத் தோன்றி, அதனை நிறுத்திவிடுவோம்.
மேலும், காமம் மேலிடும்போது இதுபோன்று தண்ணீரில் போய் அமர்ந்து கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்கிறோம்.
எனவே கோபம் வரும்போது அதனை எப்படி சமாளிப்பது என்று யோசித்து அதனை செய்ய வேண்டும்.