Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பயணம் செல்லும்போது கவ‌னி‌க்க வே‌ண்டியவை?

-ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப. ‌வி‌த்யாதர‌ன்

பயணம் செல்லும்போது கவ‌னி‌க்க வே‌ண்டியவை?
, திங்கள், 17 மார்ச் 2008 (11:03 IST)
நாம் பயண‌‌் செ‌ல்வத‌ற்கு மு‌ன்பு பயண‌ம் செ‌ல்ல வே‌ண்டிய நாளன்று நடக்கும் நட்சத்திரத்தைப் பார்க்க வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பயணம் மேற்கொண்டால் சென்று சேர வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாது. அது போல சில நட்சத்திரங்களில் மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்தால் திரும்பி வரமாட்டார்கள் என்பன போன்றவை சொல்லப்பட்டுள்ளது.

சூலம் என்றெல்லாம் காலண்டரில் பார்த்திருக்கிறோம். அன்றைய தினத்தில் பயணத்தை தவிர்க்க வேண்டும். அல்லது ஒரு சில சிறிய பரிகாரங்களை செய்துவிட்டுச் செல்ல வேண்டும்.

கிராமத்தில் பார்த்தால் மக்கள் இதுபோன்ற நாட்களில் வெளியே கிளம்பும்போது வேம்பு இலைகளை தங்களது ஆடைகளில் குத்திக்கொண்டு செல்வார்கள்.

ஏனெனில் பாலுள்ள மரங்களில் வேம்புவிற்கு தனி சிறப்பு உண்டு. இது ஒரு ப‌ரிகார‌ம் போ‌ன்றதுதா‌ன்.

பயணத்திலும் வான் வழி, சாலை வழி, நீர் வழி என பிரிக்க வேண்டும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதத்தில் கிரக அமைப்பைப் பார்க்க வேண்டும்.

சந்திராஷ்டம நாட்களில் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மேலும், அஷ்டமத்து சனி, ஏழரை சனிக்காரர்கள் அதிகாலை மற்றும் நள்ளிரவுப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அதிகாலை, நள்ளிரவு ஆகியவை சனியின் ஆதிக்கம் அதிகம். அது இரவுக்குரிய கிரகம். அதனால்தான் ஏழரை நடக்கும்போது இரவுப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறோம்.

ஆனாலும் பயணத்தை தவிர்க்க இயலாத நிலை இருந்தால் சொந்த வாகனத்தைத் தவிர்த்துவிட்டு பொது வாகனத்தில் செல்ல அறிவுறுத்துகிறோம்.

இதுபோன்றே சந்திராஷ்டமம் மற்றும் சில நட்சத்திரங்களில் பயணம் செ‌ய்வது ச‌ரியாக இரு‌க்காது. விபத்து‌த்த‌ா‌ன் எ‌ன்று இ‌ல்லை, பயணத்தில் பல சிக்கல்களை சந்திக்க வேண்டியதும் வரலாம்.

பொருள் இழப்பு, பயணச் சிக்கல், பயணிகளுடன் சண்டை போன்றவையும் ஏற்படும். போன காரியம் தோல்வி அடையும். பார்க்க நினைத்தவர் அங்கில்லை எ‌ன்பது போ‌ன்ற ‌நிலை ஏற்படும்.

எ‌ப்படி‌ப்ப‌ட்ட பயணமாக இருந்தாலும் சரி.. செல்லும் நாளன்று நடக்கும் கிரக அமைப்பை பார்த்துவிட்டு செல்வது நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil