Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி மாணவி குளிக்கும்போது வீடியோ எடுத்த சென்னை இளைஞர்: போலீஸ் அதிரடி நடவடிக்கை..!

Webdunia
சனி, 23 டிசம்பர் 2023 (07:31 IST)
சென்னையில் கல்லூரி மாணவி குளிக்கும் போது ஜன்னல் வழியாக வீடியோ எடுத்த இளைஞரை கைது செய்து விசாரணை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னை ராயபுரம் பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர் தனது வீட்டில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது ஜன்னல் வழியாக ஒரு இளைஞர் செல்போனில் வீடியோ எடுத்ததாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவி உடனடியாக தங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் கூற, அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதனை அடுத்து போலீசாரிடம் அந்த நபர் ஒப்படைக்கப்பட்ட போது அவரது பெயர் விக்னேஷ் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் அந்த பெண்ணின் வீட்டிற்கு கீழ் தளத்தில் தான் வசித்து வருகிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து போலீசார் விக்னேஷை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கீழ் வீட்டில் உள்ள ஒருவரே கல்லூரி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த சம்பவம் ராயபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments