Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்கொலை செய்ய முடிவெடுத்த காதலர்கள்: திடீரென கொலையாக மாறிய அதிர்ச்சி சம்பவம்

Webdunia
வெள்ளி, 12 ஜூலை 2019 (08:34 IST)
காதல் தோல்வியால் காதலன் மற்றும் காதலி தற்கொலை செய்ய முடிவு செய்த நிலையில் திடீரென காதலன் தனது காதலியை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று சென்னையில் நடந்துள்ளது
 
சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த சுமர்சிங் என்பவர் காஜல் என்ற பெண்ணண கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த நிலையில் இந்த காதலை காஜலின் பெற்றோர் ஏற்கவில்லை. காஜலுக்கு வேறொரு மாப்பிள்ளையை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த காஜல், சுமர்சிங்கிடம் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். தற்கொலையில் சுமர்சிங்கிற்கு விருப்பம் இல்லை என்றாலும் காதலியின் பேச்சை தட்டமுடியாமல் இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். 
 
திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து இருவரும் சயனைடு சாப்பிட்டுள்ளனர். ஆனால் தற்கொலை முடிவில் இருந்து திடீரென மாற்றம் கொண்ட சுமர்சிங், வாயில் இருந்த சயனைடை துப்பிவிட்டு தற்கொலையில் இருந்து தப்பினார். அதே நேரத்தில் காஜலின் உயிரும் பிரியவில்லை. காஜல் உயிருடன் இருந்தால் மீண்டும் தன்னை தற்கொலை செய்ய வற்புறுத்துவார் என முடிவு செய்து அரைகுறை உயிருடன் இருந்த காஜலை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
 
பின்னர் மயங்கி விழுந்த மாதிரி நடித்த சுந்தர்சிங்கை லாட்ஜ் ஊழியர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் போலீஸ் விசாரணையில் முன்னுக்குபின் முரணுடன் பேசியதால் போலீசார், காஜலை சுந்தர்சிங் தான் கொலை செய்தார் என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணித்ததை விட முன்னரே உருவானது காற்றழுத்த தாழ்வு.. கனமழை பெய்யுமா?

சட்டசபையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்.. ஆனால் செங்கோட்டையன் உள்ளே..

இந்த பழத்தையா நல்லத்தில்லன்னு சொன்னீங்க! லைவாக தர்பூசணியை அறுத்து வீடியோ போட்ட எம்.எல்.ஏ!

அந்த தியாகி யார்? அதிமுக எம்.எல்.ஏக்களின் பேட்ஜ்.. என்ன அர்த்தம்?

2 ஆண்டுகளில் 7 மாநில சட்டமன்ற தேர்தல்: வக்பு சட்ட திருத்த மசோதா பாஜக.வுக்கு பாதகமா? சாதகமா?

அடுத்த கட்டுரையில்
Show comments