குளத்தின் ஆழத்துக்கு சென்று டிக்டாக் எடுத்த இளைஞர் – நொடிப்பொழுதில் நடந்த விபரீதம் !

Webdunia
வெள்ளி, 22 நவம்பர் 2019 (15:02 IST)
கோவையில் நண்பர்களோடு குளத்திற்கு குளிக்க சென்ற இளைஞர் ஆழத்துக்கு சென்று டிக்டாக் எடுக்க நினைத்தபோது ஆழத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

கோவை வடுகம்பாளையத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் விக்னேஷ்வரன். இவர் தன் நண்பர்களுடன் நேற்று குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது அவர் கரையில் நின்று சில டிக்டாக் வீடியோக்களை எடுத்துள்ளார். பின்னர் ஆழத்த்துக்கு சென்று எடுப்பதற்காக செல்போனோடு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்து விரைந்த தீயணைப்புப் படையினர் அவரது சடலத்தையும் செல்போனையும் மீட்டனர். இந்த சம்பவத்தால் அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments