Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உறவுமுறையை மறந்து உல்லாசம்: கொலையில் முடிந்த காதல்!

உறவுமுறையை மறந்து உல்லாசம்: கொலையில் முடிந்த காதல்!

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2016 (16:18 IST)
காட்பாடி அருகே தகாத உறவை மறைக்க தங்கையை அண்ணன் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது. இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
காட்பாடி அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்த அமுதா என்ற 17 வயது இளம்பெண் 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு டெய்லரிங் படித்து வந்துள்ளார். அவருக்கும் அவரது அண்ணன் முறையான ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த 20 வயதான் சபரி என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
 
சபரி அடிக்கடி அமுதாவின் வீட்டுக்கு வந்து செல்வதால் இருவரும் காதலிக்க தொடங்கினர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அமுதாவின் கிராமத்துக்கு வந்த சபரி அங்கேயே தங்கிவிட்டார். அமுதாவின் பெற்றோர்கள் நிலத்துக்கு வேலைக்கு சென்றதும் இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.
 
தனியாக இருந்ததால் இருவரும் எல்லையை மீறி உல்லாசமாக இருந்துள்ளனர். 10 நாட்களாக உல்லாசமாக இருந்த சபரி மீது அமுதாவின் பெற்றோர்க்கு சந்தேகம் வந்ததுள்ளது.
 
இது சபரிக்கு தெரியவர, வெளியில் தெரிந்தால் அவமானமாகிவிடும் என நினைத்து அமுதாவின் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் அமுதாவை கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொன்று தூக்கில் தொங்கவிட்டு சென்றுள்ளான் சபரி.
 
வீட்டுக்கு வந்த பெற்றோர்கள் அமுதா தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறையில் புகார் அளித்தனர். அவர்கள் வந்து பார்த்த போது அமுதா தூக்கு மாட்டி தற்கொலை செய்ததற்கான எந்த அடையாளமும் இல்லை. இதனால் காவல்துறை தீவிர விசாரணை நடத்தினர்.
 
இதன் பின்னர் கடந்த 10 நாட்களாக அங்கு தங்கியிருந்த சபரி மீது போலீசுக்கு சந்தேகம் வர அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தகாத உறவு காரணமாக தங்கையை கொலை செய்த குற்றத்தை சபரி ஒப்புக்கொண்டுள்ளார்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments