Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்தில் தடுமாறி விழுந்த வாலிபர்.. நெஞ்சை பதறவைத்த சம்பவம்

Webdunia
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (20:22 IST)
திருப்பூர் மாவட்டத்தில் மோட்டார் பைக் மீது அரசுப் பேருந்து உரசியதால் பேருந்தில் சிக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் முத்துச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த அருண்குமார்  என்பவர், கடந்த 30 ஆம் தேதி அவிநாசி பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு அருகில் வலதுபுறமாக சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து அருண்குமாரின் மோட்டார் பைக்கின் மீது உரசியுள்ளது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது அந்த பேருந்தின் பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு தேர்வில் 100-க்கு 101.66 மதிப்பெண்: முறைகேடு நடந்திருப்பதாக கூறி தேர்வர்கள் போராட்டம்..!

இந்தியா அமெரிக்காவுக்கு வரி விதித்தால், அமெரிக்காவும் இந்தியாவுக்கு வரி விதிக்கும்: டிரம்ப்

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி கடலுக்குள் பாய்ந்த கார்.. சென்னை துறைமுகத்தில் பரபரப்பு..!

இன்று காலை 10 மணி வரை சென்னை உள்பட எத்தனை மாவட்டங்களில் கனமழை? வானிலை எச்சரிக்கை..!

கேரளாவில் இருந்து கொண்டு வந்த குப்பைகளை திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்: பிரேமலதா

அடுத்த கட்டுரையில்
Show comments