Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து 2 பள்ளி மாணவிகளை கடத்தி குடும்பம் நடத்திய வாலிபர் கைது

Webdunia
திங்கள், 6 ஜூலை 2015 (21:04 IST)
அடுத்தடுத்து இரண்டு பள்ளி மாணவிகளை கடத்தி குடும்பம் நடத்தி வந்த திருமணமான வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாம்பரத்தை அடுத்த பொழிச்சநல்லூரைச் சேர்ந்த 16 வயது மாணவி, திருவள்ளூரை அடுத்த தண்ணீர்குளத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வந்து மாணவி திடீரென மாயமாகியுள்ளார்.
 
இதேபோல், கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதே பள்ளியில் படித்த தண்ணீர் குளத்தை சேர்ந்த மற்றொரு 11ஆம் வகுப்பு மாணவியும் மாயமானார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரித்து வந்தனர்.
 
இந்நிலையில் இரு மாணவிகளும், திருவள்ளூரை அடுத்த காக்களூரில் உள்ள கோபி (30) என்பவரது வீட்டில் இருப்பது தெரியவந்தது. மேலும், கடந்த 2 ஆண்டுகளாகவே கோபி, மாணவிகளை வீட்டில் சிறை வைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
 
கோபிக்கு திருமணமாகி மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது குறிப் பிடத்தக்கது. மாணவிகளுக்கு கோபி உறவினர் முறை ஆவார். மீட்கப்பட்ட மாணவி கள் இருவரும் அவர்களது பெற்றோரிடம் ஒப்ப டைக்கப்பட்டனர். கோபி மீது கடத்தல், கற்பழிப்பு உள்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
 

தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! அதிமுகவை விளாசிய ஆர்.எஸ் பாரதி.!!

தொட்டிலில் தூங்கிய 24 நாள் குழந்தை.. குரங்கு கடித்து குதறியதால் பெற்றோர் அதிர்ச்சி..!

19 வயது பெண்ணை காதலித்த இரு இளைஞர்கள்.. கொலையில் முடிந்த முக்கோண காதல்..!

மேற்கு வங்க ரயில் விபத்து..! பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு..! மீட்பு பணி தீவிரம்..!!

பிரதமர் மோடியின் தமிழகம் பயணம் திடீர் ரத்து! என்ன காரணம் தெரியுமா?

Show comments