Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒசூர் அருகே காதல் ஜோடி படுகொலை...

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2018 (16:21 IST)
ஜாதிகள் இல்லையடி பாப்பா என இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாடினார் நம் பாட்டுக்கொரு புலவன் பாரதி. ஆனால் பாமரன் முதல் பணக்காரன் வரை இன்றைக்கு ஜாதி எனும்  இத்தீண்டாமைத் தீ பலியாகாத இடமோ மனிதனோ  இல்லை என்று சொன்னால் இக்காலத்துக்கு ஏற்ப சாலப் பொருத்தமாக அமையும்.

அண்மைக்காலமாக ஆவணக்கொலைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. மன விருப்பம்தான் திருமணம் செய்துகொள்பவர்களின் பிரதான விஷயமாக இருக்கும் போது, இந்த ஜாதி பார்த்து மணம் முடித்து வைக்கும் வழக்கம் நாவீன காலத்தையும் கூட இருண்ட காலமாக்குகிறது.

இன்று ஒசூரில் இளம் காதல் ஜோடி திருமணம் செய்த சில மாதத்திலேயே பெண்ணின் வீட்டாரால் கொடூரமாக கொலை செய்யப்படுள்ளது. நம் ஒட்டுமொத்த மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

இந்த ஆணவக்கொலை தொடர்பாக பெண்ணின் தந்தை உட்பட மூவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஒசூரைச்சேர்ந்த காதல் ஜோடி அடித்துக்கொலை,செய்யப்பட்டு  உடல்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி ஆற்றில் மீட்கப்பட்டது.

சூடுகொண்ட பள்ளியை சேர்ந்த நந்திஷ்,அதே பகுதியை சேர்ந்த சுவாதி ஆகியோர் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்டில் வீட்டை எதிர்த்து  பதிவு திருமணம் செய்துகொண்டனர். ஆனால் சில தினங்களுக்கு முன்பு இருவரும் கொலை செய்யப்பட்டதாக  செய்திகள்  வெளியானது.

இன்று இவர்கள் இருவரின் உடலையும் கர்நாடக போலீஸ் மீட்ட நிலையில் முக்கிய குற்றவாளிகளை  கிருஷ்ணகிரி போலீஸார் கைது செய்தனர்.

காதலர்களை கொன்று விட்டு அவர்களின் கை,கால்களை கொலையாளிகள் காவிரியில் வீசியதை போலீஸார் கண்டுபிடித்தனர்.

பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால் பெண்ணின் குடும்பத்தினர் இந்தக்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் விசாரிக்கின்றனர்.

கொலைதொடர்பாக பெண்ணின் சித்தப்பா வெங்கடேஷ், உறவினர் கிருஷ்ணன்  ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இருவரும், வேறு வேறு வகுப்பினர் என்பதால்தான் இந்த ஆவணக்கொலை நடந்திருப்பதாக தகவல் வெளியாகின்றன.

கர்நாடக மாநிலத்திலுள்ள மாண்டியா அருகே மலஹன்பள்ளியில் உள்ள காவிரியில் காதலர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஆக்ஸ்ட் மாதம் தான் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் வாழ விடாமல் இளம் காதல் ஜோடியை பெண்ணின் குடும்பத்தார் கொலை செய்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரை நிறுத்தியது இந்தியாதான்! அமெரிக்காவுக்கு வேற வேலையில்ல!?! - ட்ரம்ப்க்கு ஜெய்சங்கர் குட்டு!

பிரபல நடிகையின் செல்போன் ஹேக்.. டெலிகிராமில் ஆபாச புகைப்படங்கள்.. அதிர்ச்சி தகவல்..!

100 ஆடம்பர அறைகள்: அரண்மனையை 5 நட்சத்திர ஓட்டலாக மாற்றும் டாடா நிறுவனம்..

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை! - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சீனா - மலேசியா கண்டுபிடிக்கும் மாற்று எரிபொருள்.. EV வாகனங்களுக்கு மூடுவிழாவா?

அடுத்த கட்டுரையில்
Show comments