Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"கோடை விழாவுக்கு" கோவிந்தா....கோவிந்தா....!

"கோடை விழாவுக்கு" கோவிந்தா....கோவிந்தா....!

Webdunia
வியாழன், 16 ஜூன் 2016 (13:16 IST)
கோடை விழாவுக்கு அதிமுக அமைச்சர்கள் வரவில்லை என்ற காரணத்தினால், ஏற்காடு கோடைவிழாவையே மாவட்ட ஆட்சியர் ஒத்திவைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
 

 
மலைவாழ் மக்கள், நகர பகுதி மக்கள் ஆகியோரை இணைத்து மலைப்பகுதிகளில் கோடை திருவிழாவை கடந்த 1973 ம் ஆண்டு முதல் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இதனையடுத்து, தொடர்ந்து கோடை விழா நடைபெற்று வருகிறது.
 
இதற்கான ஏற்பாடுகளை, மலை சார்ந்த பகுதிகளில் உள்ள தொழில் அதிபர்கள், சமூக சேவகர்கள், மாநில அரசு ஆகியை ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர்.
 
அம்மா உத்தரவின் பேரில் சேலத்தில் நல்ல மழை பெய்துள்ளது என கூறி, தமிழகத்தை மட்டும் அல்லாது உலகையே திடுக்கிடவைத்த சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத் எடுத்த முடிவு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
 
ஜூன், 18,19 ஆகிய தேதிகளில் ஏற்காடு கோடை மலர் கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், அதிமுக செயல்வீரர்கள் கூட்டமும் ஜூன் 18,19 தேதிகளில் நடைபெற உள்ளது. அதிமுக அமைச்சர்கள் கோடை விழாவுக்கு வருகை தர இயலாது என்பதால் ஏற்காடு கோடை விழாவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துவிட்டதாக அங்குள்ள சமூக சேவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 
அம்மா உத்தரவின் பேரில் புகழ் சம்பத் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த விவகாரம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு திமுகவினர் கொண்டு சென்றுள்ளார்களாம். இதனையடுத்து, விரைவில் சம்பத் மீது திமுக ஏவுகணை பாயும் என தெரியவருகிறது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுகவில் மீண்டும் தளவாய் சுந்தரம்.. பறிபோன பதவி மீண்டும் கிடைத்தது..!

இனி எழும்பூரில் இருந்து இந்த 2 ரயில்கள் புறப்படாது.. தாம்பரம் தான்..!

பீட்சா, பர்கர் சாப்பிட்ட கூடைப்பந்து வீராங்கனை உயிரிழப்பு; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

திடீரென தலைமை அலுவலகத்தை மாற்றும் அமேசான்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments