Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ரூ. 6 ஆயிரம் கோடி ஓட்டுக்கு பணம் பட்டுவாடா - ஈஸ்வரன்

Webdunia
புதன், 18 மே 2016 (13:18 IST)
தமிழகம் முழுவதும் ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி வரை கொடுக்கப்பட்டுள்ளதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 

 
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் ஓட்டிற்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது அப்பட்டமாக தெரிந்தும் தேர்தல் ஆணையம் அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் மட்டும் தேர்தலை தள்ளி வைத்துள்ளது.
 
தேர்தலை தள்ளி வைப்பதுதான் இதற்கு தீர்வா? தேர்தல் தள்ளிவைப்பு என்பது பணப்பட்டுவாடாவிற்கு மேலும் வழி வகுக்கும். நாளை தேர்தல் முடிவுகள் வந்து புதிய ஆட்சியும் அமைந்து விட்டால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் இடைத்தேர்தல் போல் நடக்கும். ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஒரு அமைச்சர் உட்கார்ந்து கொண்டு தேர்தல் பணியாற்றுவார்கள்.
 
தமிழகம் முழுவதும் ரூ. 6 ஆயிரம் கோடி வரை ஓட்டுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் பிடிபட்ட ரூ.570 கோடி குறித்து பல சந்தேகங்கள் எழுகின்றன. தேர்தல் கமிஷன் திமுக, அதிமுகவிற்கு துணை போகிறதோ? என்ற சந்தேகம் எழுகிறது” என்று கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் உள்ள மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்.. 5 பேர் பரிதாப பலி.!

அரசுப் பள்ளிகளில் 2025- 26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தயாராகும் பெற்றோர்..!

16 மாநிலங்களில் 10 கோடி ஆன்லைன் மோசடி.. டாக்டர் உள்பட 2 பேர் கைது..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments