Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவுக்கு சங்கரை அழைத்து செல்லும் பெண் காவலர்கள்.. இதுதான் தகுந்த பாடம்..!

Mahendran
புதன், 15 மே 2024 (12:20 IST)
கோவையில் இருந்து திருச்சிக்கு சவுக்கு சங்கரை பெண் காவலர்கள் அழைத்து செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
பெண் காவலர்களை இழிவாக பேசிய வழக்கில், திருச்சி மகிளா நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார். இந்த நிலையில் சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, முழுக்க முழுக்க பெண் காவலர்கள் அடங்கிய குழுவை காவல்துறை நியமித்துள்ளது.

பெண் காவலர்களை இழிவாக பேசியவர்களுக்கு, இதைவிட தகுந்த பாடம் புகட்ட முடியாது என ஏற்கனவே காவல்துறை விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய பேசிய வழக்கில் நீதிமன்ற காவல் இன்று நிறைவு பெறுவதை அடுத்து கோவையிலிருந்து திருச்சிக்கு சவுக்கு சங்கர் வேன் மூலம் அழைத்துச் செல்லப்படுகிறார். 
 
அவர் அழைத்துச் செல்லப்படும் வேனில் முழுக்க முழுக்க பெண் காவலர்கள் உள்ளனர் என்பதும் இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டினகளும், சவுக்கு சங்கருக்கு சரியான பாடம் புகட்ட காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் கூறி வருகின்றனர்.
 
பெண் காவலர்கள் மத்தியில் அமைதியாக சவுக்கு சங்கர் உக்காந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்துவிட்டார்.. திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து சித்தர்..!

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்.. ரெய்டு சென்ற போலீஸ் அதிகாரி படுகாயம்..!

இளைஞரின் செல்போனை திருடிய குரங்கு.. கால் அட்டெண்ட் செய்து பேசியதா?

இன்று இரவுக்குள் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை அலெர்ட்!

வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments