Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களும் அர்ச்சகராகலாம் அறிவிப்புக்கு பாஜக வரவேற்பு

Webdunia
ஞாயிறு, 13 ஜூன் 2021 (19:37 IST)
நேற்று அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றும் அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்றும் அறிவித்து இருந்தார். அது மட்டுமின்றி பெண்கள் அர்ச்சகராக விரும்பினால் அவர்களுக்கு தனி பயிற்சி கொடுக்கப்படும் என்றும் பெண்களும் அர்ச்சகராகலாக நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார் 
 
பெண்கள் அர்ச்சகராகலாம் என்ற அறிவிப்புக்கு ஆகம விதிகளை பின்பற்றும் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பெரும்பாலானோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்பெண்கள் அர்ச்சகர் ஆகலாம் என்பதை தான் வரவேற்பதாக கூறியுள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:
 
“பெண்கள் உட்பட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசின் முடிவை பாஜக வரவேற்கிறது, தெளிவான அறிவு, ஆகமவிதிகளைப் பற்றிய புரிதல் உள்ளவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க  வேண்டும்! 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments