Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துரத்தி துரத்தி காதலித்த பெண் : பிடிக்காமல் தற்கொலை செய்துகொண்ட போலீஸ்காரர்

Webdunia
வியாழன், 25 ஏப்ரல் 2019 (16:50 IST)
நெல்லை மாவட்டம்  நித்திரவிளை அருகே உள்ள பாறையடி பகுதியில் வசித்து வந்தவர் அஜின் ராஜ் (26) இவர் நெல்லை மாவடம் மணிமுத்தாறு 9 வது பட்டாலியனில் வேலை பார்த்து வந்தநிலையில் சமீபத்தில் அஜின் ராஜ் கோதையாறு நீர் மின் நிலையத்திற்கு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பாதுகாப்புக்காக வைத்திருக்கும் துப்பாக்கியால் தன்னையே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
துப்பாக்கிச்சத்தம் கேட்டு பதறியடித்து ஓட்டி வந்த மக்கள்,கழுத்தில் குண்டடிபட்டு ரத்த வெள்ளத்தில் விழுந்துகிடந்த அஜன்ராஜை  பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
 
இதனையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விசாரணை நடத்தினர். அதில் அஜினுக்கும் ஒரு கல்லூரி மாணவிக்கும் காதல் இருந்துள்ளதாகத் தெரிகிறது. 
 
மேலும் தனக்கு போலீஸ் வேலை கிடைத்த பின்னர் காதலியுடன் பேசுவதை தவிர்த்துவிட்டு பிறகு விலகி விடலாம் என்று நினைத்திருந்தார்.
 
இதனை எதிர்பார்க்காத காதலி நித்தரவிளை தான் ஏமாற்றப்படுதாக உணர்ந்து போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளார். பின்னர் போலிஸார் அஜினிடன் விசாரித்துள்ளதாகத் தெரிகிறது.
 
இந்நிலையில் அஜின் காதலியிடம் சில மாதத்தில் திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறியதாகத்தெரிகிறது. அதனால் அஜினை  தொடர்பு கொண்டு  இதுபற்றி காதலி பேசியிருக்கிறார்.
 
அப்போது  நாம் நாளைக்கு திருமணம் செய்துகொள்ளலாம் என அஜின் காதலியிடம் கூறியுள்ளார்.
 
இந்நிலையில் திருமணத்துக்காக காதலி காத்திருந்தபோது, திருமணம் செய்துகொள்ள இருந்த காதலியைப் பிடிக்காமல்  அஜின்  துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments