Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலனை கள்ளக்காதலனை வைத்து கொலை செய்த பெண் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

Webdunia
புதன், 13 டிசம்பர் 2017 (12:02 IST)
தொல்லை கொடுத்த முன்னாள் கள்ளக்காதலனை, மற்றொரு கள்ளக்காதலன் மூலம் ஒரு பெண் கொலை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
கிருஷ்ணகிரி அருகே உள்ள தேசவசமுத்திரம் அருகே கடந்த 10ம் தேதி ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.  விசாரணையில் அவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா(32) என்பது தெரிவந்தது.
 
அதன்பின் போலீசார் நடத்திய விசாரணையில் அவரின் கள்ளக்காதலி மம்தா என்பவர் இந்த கொலையில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
 
கிருஷ்ணகிரியை சேர்ந்த முரளி என்பவருக்கும், மம்தாவிற்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால், அதற்கு முன்பே மம்தா கிருஷ்ணாவுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். திருமணத்திற்கு பின்பும் அவருடனான உறவை தொடர்ந்து வந்துள்ளார் மம்தா.
 
அந்நிலையில், பாப்பாரப்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி செவத்தான் என்பவருடன் மம்தாவிற்கு பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஒருபக்கம் மம்தாவை பார்க்க கிருஷ்ணாவும் அடிக்கடி கிருஷ்ணகிரி வந்துள்ளார். இதுபற்றி செவத்தான் விசாரித்த போது, அவர் தன் முன்னாள் காதலன் எனவும், தனக்கு மிகவும் தொல்லை கொடுத்து வருகிறார், அவரை கொலை செய்து விட்டால் நாம் நிம்மியதியாக இருக்கலாம் என மம்தா கூறியுள்ளார்.
 
எனவே, கிருஷ்ணாவை கொலை செய்ய அவர்கள் இருவரும் திட்டமிட்டனர். அதன்படி, கடந்த 10ம் தேதி கிருஷ்ணாவை கிருஷ்ணகிரிக்கு வரவழைத்துள்ளனர். அப்போது, மறைவான ஒரு இடத்திற்கு சென்று நாம் உல்லாசமாக இருப்போம் என மம்தா கூறியுள்ளார். அதை உண்மை என நம்பிய கிருஷ்ணா மம்தாவுடன் சென்றுள்ளர். 
 
பொன்மலை கோவில் அருகே உள்ள மறைவான இடத்திற்கு சென்றவுடன், அங்கு தயாராக இருந்த செவத்தான் மற்றும் அவரது நண்பர் சக்திவேல் இருவரும் கிருஷ்ணாவின் தலையில் கத்தியால் பலமாக அடித்துள்ளனர்.  இதில், கிருஷ்ணா மயங்கி விழுந்தார். அதன்பின், அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.
 
இதையடுத்து, மம்தா, செவத்தான், சக்திவேல் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments