Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூர் அருகே ஆம்புலன்ஸிலேயே பிரசவம்… மருத்துவ உதவியாளருக்குப் பாராட்டு!

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2021 (10:14 IST)
ஆம்புலன்ஸிலேயே பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமானதால் மருத்துவ உதவியாளரே பிரசவம் பார்த்துள்ளார்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவரின் மனைவி, யுவராணிக்கு நேற்று முன் தினம் இரவு பிரசவ வலி வந்துள்ளது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 108 அவசர ஊர்தி வரவழைக்கப்பட்டுள்ளது.

ஆனால் செல்லும் வழியிலேயே யுவராணிக்கு வலி அதிகமாக, வேறு வழி இல்லாமல் ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் ஜெயலட்சுமியே அவருக்குப் பிரசவம் பார்த்துள்ளார். இதையடுத்து யுவராணிக்கு ஆண்குழந்தை பிறந்தது. பின்னர் அவர்கள் இருவரும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பரிசோதனை செய்யப்பட்டனர். மருத்துவர்கள் தாயும் சேயும் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து மருத்துவ உதவியாளருக்கு ஜெயலட்சுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments