Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கைவைப்பதா? – சீமான் கண்டனம்

Webdunia
புதன், 8 ஏப்ரல் 2020 (17:18 IST)
சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ‘’அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எம்பிக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி கிடையாது என முடிவெடுக்கப்பட்டது.

அதில், எம்பிக்கள் அனைவருக்கும், ஒருவருடத்திற்கு சம்பளத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் எனவும் நிதி சிக்கன் நடவடிக்கையாக பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் தெரிவித்தார்.

அதேபோல், குடியரசுத்தலைவர், துணைக் குடியரசுத்தலைவர், ஆளுநர்களும் 30 சதவீத ஊதியத்தை பிடித்தம் செய்ய தாமாக முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  இதுகுறித்து நடிகரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமானசீமான் ஒர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,  தனிப்பெரு முதலாளிகளுக்கு நாட்டின் பொருளாதாரத்தைத் தாரைவார்த்துவிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கைவைப்பதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : 

இப்பேரிடர் காலத்தை எதிர்கொள்ள கூரிய திட்டமிடலும், சீரிய நடவடிக்கைகளும் பேரவசியமானது என்பதை இனியாவது ஆட்சியாளர்கள் உணர்ந்து, மக்கள் மீது சுமையை ஏற்றாது தனிப்பெரு முதலாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளையும், வரிகளையும் ரத்து செய்து, பெரும் பொருளியல் வாய்ப்புகொண்டோரிடமிருந்து வரி வருவாயைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்குரிய தொகுதி மேம்பாட்டு நிதி கையகப்படுத்தலைக் கைவிட்டு மாற்று பொருளாதாரத் தேடல் முறைகளை நோக்கிச் செல்ல வேண்டும் எனவும் மத்திய அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்.. ஜாமீன் பெற்று மீண்டும் அதே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை..!

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்......??? விஜய்க்கு கேள்வி எழுப்பிய தமிழிசை

அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து பேசக்கூடாது: ரங்கராஜன் நரசிம்மனுக்கு, நிபந்தனை ஜாமீன்..!

பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து: சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

5 மாநில ஆளுநர்கள் மாற்றம்: ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments