Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பவே உங்க கூட வந்திருக்கலாம்: செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்?

Webdunia
வியாழன், 27 ஜூன் 2019 (08:00 IST)
அமமுகவில் இருந்து தங்க தமிழ்ச்செல்வன் வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதி என்றாகிவிட்ட நிலையில் அவருடைய அடுத்த அரசியல் பயணம் எந்த கட்சியில் இருந்து என்பதில் தற்போது அவருக்கு சிறு குழப்பம் ஏற்படுகிறது
 
அதிமுகவுக்கு மீண்டும் சென்றால் ஓபிஎஸ் அணியினர் தன்னை இன்னும் எதிரியாகவே பார்க்க வாய்ப்பு உள்ளது. ஈபிஎஸ் அணியினர்களும் தன்னை ஓபிஎஸ் அணியை எதிர்க்க மட்டுமே பயன்படுத்துவார்கள் என்ற சந்தேகமும் உள்ளது.
 
இதனால் தங்க தமிழ்ச்செல்வன், திமுக பக்கம் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்வது போல் சமீபத்தில் செந்தில் பாலாஜியிடம், '`நீங்க தி.மு.க போனப்பவே, நானும் தி.மு.க-வுக்கு வந்திருக்கலாம்,. அப்படி வந்திருந்தால் திமுகவில் இந்நேரம் எனக்கும் ஏதாவது பதவி கிடைத்திருக்கும். அதுமட்டுமின்றி ஆண்டிபட்டி எம்.எல்.ஏவாகவும் இப்போது நான் இருந்திருப்பேன்' என்று புலம்பியதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இப்பவும் ஒண்ணும் கெட்டு போகவில்லை. திமுகவுக்கு வாருங்கள். வரும் உள்ளாட்சி தேர்தலில் மேயர் வேட்பாளர் பதவி வாங்கி தருவதாக தங்க தமிழ்ச்செல்வனிடம் செந்தில் பாலாஜி கூறியதாக வதந்திகள் பரவி வருகிறது.
 
தங்க தமிழ்ச்செல்வனின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை தமிழக அரசியல் களம் உற்றுநோக்கி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments