Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாலியை கழற்றி கணவனின் கழுத்தை இறுக்கி கொலை செய்த மனைவி.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

தாலியை கழற்றி கணவனின் கழுத்தை இறுக்கி கொலை செய்த மனைவி.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

Siva

, புதன், 21 ஆகஸ்ட் 2024 (16:20 IST)
தாலிக்கயிற்றை கழற்றி கணவனின் கழுத்தில் சுற்றி இறுக்கி கொலை செய்த மனைவி குறித்த சம்பவம் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் நாகம்மாள் என்பவரை 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். இது மணிவண்ணனுக்கு முதல் திருமணம் என்றாலும் நாகம்மாவுக்கு மூன்றாவது திருமணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி மணிவண்ணன் மற்றும் அவரது மனைவி நாகம்மாள் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த நாகம்மாள் தாலியை கழட்டி மணிவண்ணனின் கழுத்தை இறுக்கியதாகவும் இதனை அடுத்து அவர்  சிறிது நேரத்தில் மயங்கியதாக கூறப்படுகிறது..

இதனை அடுத்து நாகம்மாள், அவரது சகோதரி அபிராமி, அவருடைய கணவர் நந்தகுமார் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து மணிவண்ணன் உடல் நலக்குறைவு காரணமாக மயங்கி விழுந்து விட்டதாக மருத்துவர் இடம் தெரிவித்துள்ளனர் . ஆனால் மருத்துவர் அவரை பரிசோதனை செய்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஆனால் கழுத்தில் காயங்கள் இருப்பதை கவனித்த டாக்டர்கள் திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்த நிலையில் காவல்துறையினர் விசாரணையில் நாகம்மாள் தனது கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷேக் ஹசீனாவை நாடு கடத்துங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேச எதிர்க்கட்சி கோரிக்கை..!