Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

Senthil Velan
செவ்வாய், 21 மே 2024 (18:36 IST)
வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக முன்னாள் கணவர் ராஜேஷ் தாஸ் மீது ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில் கேளம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு தொடர்பாக, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. 
 
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், அவரை கைது செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்ததை தொடர்ந்து, அவரிடம் இருந்து விவாகரத்து கோரி பீலா ராஜேஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

ALSO READ: நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!
 
தற்போது ராஜேஷ் தாஸ் மீது பீலா ராஜேஷ் புகார் அளித்துள்ளார். தனக்கு சொந்தமான கேளம்பாக்கம் அடுத்த தையூர் பகுதியில் உள்ள பண்ணை வீட்டிற்குள் அத்துமீறி  நுழைய முயன்றதாக ராஜேஷ் தாஸ் மீது கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள கேளம்பாக்கம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்