Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறரை அடிக்கும் விஜயகாந்த்: காரணம் சொல்கிறார் கேளுங்கள்

Webdunia
புதன், 4 மே 2016 (11:29 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான் கூட்டங்களில் பிறரை அடிப்பது பற்றி முதன் முறையாக விளக்கம் அளித்துள்ளார்.


 
 
விஜயகாந்த் பற்றி அதிகமாக ஊடகங்களில் வருவது அவரின் அடிதடி செயல்கள் தான். அரசியலில் வந்ததில் இருந்து இன்று வரை விஜயகாந்த் கோபம் வந்தால் திட்டுவதும், தொண்டர்கள், வேட்பாளர்கள், பாதுகாவலர் என பாரபட்சம் இல்லாமல் அடிப்பதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.
 
இவரின் இந்த செயல்பாடுகள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அதிகமாக பேசப்படும் ஒன்று. இந்நிலையில் தஞ்சையில் தேர்தல் பிரச்சாரம் செய்த விஜயகாந்த் தான் கூட்டங்களில் பிறரை அடிப்பதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.
 
விஜயகாந்த் செல்லும் இடங்களில் எல்லாம் யாரையாவது அடிக்கிறார் என்று கூறுகிறார்கள். தவறு எங்கு நடந்தாலும் தண்டிக்க தயங்க மாட்டேன். எனக்கு நடிக்க தெரியாது என கூறினார் விஜயகாந்த்.
 
முன்னதாக தனக்கு முதல்வராக என்ன தகுதி இருக்கிறது என கேட்கிறார்கள். நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். என் அம்மா, அப்பா கிராமத்தில் பிறந்தவர்கள் இதைவிட என்ன தகுதி வேனும் நான் முதல்வராக என பேசினார் விஜயகாந்த்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments