Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னுடைய உச்சம் உனக்கு ஏன் அச்சம்- விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (12:05 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் பணி நடந்து வருகிறது.

இப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.. இந்த நிலையில், மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய  நடிகர் ரஜினிகாந்த், பருந்து, காகம் பற்றி கதை கூறினார். இதில், விஜய்யை தான் காகம் என்று கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவலானது.

ஆனால், விஜய் என்றைக்கும் தன்னை சூப்பர் ஸ்டார் என்று கூறிக் கொண்டதில்லை என்று ஒரு சிலர் கருத்துகள் கூறினர்.

இந்த நிலையில், மதுரையில், விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில் விஜய் மற்றும் ரஜினி இருவரின் புகைப்படங்களுடன்  ‘’என்னுடைய உச்சம் உனக்கு ஏன் அச்சம்’’..என் நெஞ்சில் குடியிருக்கும் இளைய தளபதி …மதுரை மண்ணின் மைந்தன் விஜய் அண்ணா வெறியர்கள் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஞானசேகரனின் சொத்து பட்டியல் வேண்டும்: பத்திர பதிவுத்துறைக்கு நோட்டீஸ்..!

பெங்களூரை அடுத்து குஜராத்திலும் பரவிய எச்.எம்.பி.வி. பாதிப்பு எண்ணிக்கை 3ஆக உயர்வு;

தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள்; பெண் வாக்காளர்கள் அதிகம்!

ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழக மரபைதான் கடைப்பிடிக்கணும்! - தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்!

கவர்னரின் செயல் கூட்டாட்சி மாண்பிற்கே விரோதமானது: ஆதவ் அர்ஜூனா

அடுத்த கட்டுரையில்
Show comments