Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் யார் வெற்றி பெறுவார்?: ரஜினிகாந்த் கருத்து

Webdunia
திங்கள், 16 மே 2016 (11:12 IST)
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சாமானிய மக்கள் முதல் பிரபலங்களும் காலை முதலே தங்கள் ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர்.


 
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் ரஜினி, அஜித், விஜய் என அனைவரும் காலியிலேயே வந்து வாக்களித்துள்ளனர்.
 
நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் காலையில் முதல் ஆளாக வந்து வக்களித்தார். ரஜினிகாந்த் யாருக்கு வாக்களித்தார் என்பது தெரியாமல் இருப்பதற்காக, வாக்களிக்கும் போது, ஊடகங்கள் யாரும் அவரை நெருக்காதபடி பார்த்துக்கொள்ளப்பட்டது.
 
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார். வாக்களிப்பது அனைவரது ஜனநாயக கடமை என தெரிவித்தார்.
 
நடிகர் ரஜினிகாந்திடம் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர் அதை என்னால் சொல்ல முடியாது என பதிலளித்தார். பின்னர் உடனடியாக காரில் புறப்பட்டார். கடந்த தேர்தலில், மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என ரஜினி பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

400 ஆண்டு பழமையான கொடைக்கானல் அருகே உள்ள கிராமம்.. மருத்துவ உதவி செய்த நிறுவனம்..!

இரவு முழுவதும் மது விருந்து? காலையில் 19 வயது கல்லூரி மாணவி உயிரிழப்பு..!

அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் நீட்டிப்பு.. கோவில் திறக்கும் நேரம் மாற்றம்..!

காங்கிரஸ் பெண் பிரமுகர் கொலை! பிணத்தை சூட்கேஸில் இழுத்து சென்ற கொலையாளி! - அதிர்ச்சி வீடியோ!

90 மணி நேர வேலை.. மனுஷங்களா இல்லை மெஷினா? - அகிலாஷ் யாதவ் ஆத்திரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments