Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேராசிரியர் அன்பழகன் மறைவு – திமுகவில் காலியான இரு பதவிகள் !

Webdunia
திங்கள், 9 மார்ச் 2020 (07:53 IST)
திமுகவின் முதுபெரும் தலைவரும் பொதுச்செயலாளருமான அன்பழகன் மறைவால் அவரது பொதுச்செயலாளர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த 12 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளித்தும் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் கடந்த மார்ச் 7 ஆம் தேதி இரவு அவர் மறைந்தார்.

இந்நிலையில் கட்சியில் அவர் வகித்துவந்த பொதுச்செயலாளர் பதவி இப்போது காலியாகியுள்ளது. அந்த பதவி கட்சியின் சீனியரான துரைமுருகனுக்குதான் வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. ஆனால் அவர் தற்போது வகித்து வரும் பொருளாளர் பதவி யாருக்குக் கொடுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அந்த பதவி கொடுக்கபடுவோர் பட்டியலில்  டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கனிமொழி, எ.வ. வேலு மற்றும் டி ஆர் பாலு ஆகியோர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. எப்படியும் திமுகவின் ஒரு வார துக்கம் முடிந்த பின்னரே அதுகுறித்து யோசிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments