அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

Prasanth Karthick
திங்கள், 7 ஏப்ரல் 2025 (18:39 IST)

தமிழக சட்டமன்றத்தில் ’யார் அந்த தியாகி?’ என அதிமுகவினர் பேட்ஜ் அணிந்து வந்த நிலையில், அதுகுறித்து திமுக அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார்.

 

டாஸ்மாக் அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையை சுட்டிக்காட்டி, 1000 கோடி ஊழல் செய்த அந்த தியாகி யார்? என தொடர்ந்து அதிமுக, திமுகவை விமர்சித்து வருகிறது. இன்று சட்டமன்றத்தில் அந்த வாசகம் அடங்கிய பேட்ஜை அணிந்து அதிமுகவினர் வந்தனர்.

 

இதுகுறித்து பேசியுள்ள திமுக அமைச்சர் ரகுபதி “தமிழ்நாட்டின் நம்பர் ஒன் துரோகி யார் என கேட்டால் அரசியல் தெரியாத 6ம் வகுப்பு மாணவன் கூட எடப்பாடி பழனிசாமியை கைக்காட்டுவான். சுயநலத்துக்காக எந்த எல்லைக்கும் செல்வார், எந்த துரோகத்தையும் செய்வார் என்பதற்கு நடமாடும் உதாரணங்கள்தான் ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும். 

 

எடப்பாடி பழனிச்சாமியின் சுயரூபம் தெரியாமல் நம்பி மோசம் போன இவர்கள்தான் அந்த தியாகிகள். பாஜகவின் பாதம் தாங்கிய மாறி ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர். 2 ஆண்டுகளாக பாஜகவுடன் கூட்டணி கிடையாது என சத்தியம் செய்துவிட்டு இன்று அவரும் அவருடைய அடிவருடிகளும் பாஜகவின் முறை போட்டுப் போய் பார்க்கிறார்கள். அவ்வகையில் பழனிசாமியை நம்பி ஏமாந்த அதிமுகவின் தொண்டர்களுமே தியாகிகள்தான்” என்று கூறியுள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments