Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையரங்குகள் திறப்பது எப்போது ? அமைச்சர் பதில்

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (17:21 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் தாக்கல் இந்தியாவிலும் அதிகரித்துள்ளதால் வரும் ஜூலை மாதம் 31 வரை சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுன் மாதம் 19 ஆம் தேதி சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.

இனிமேல் சினிமா பட ஷூட்டிங் எப்போது நடக்குமென்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வரும் ஆக்ஸ்ட் முதல் தேதியில் திரையரங்குகள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ தென்காசியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது :

கொரொனா வைரஸ் தொற்ரு முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்ட பின் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியதும் தான் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படும் என கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மேலும் ஆக்ஸ்ட் 1 ஆம் தேதிமுதல் திரையங்குகளைத் திறக்க அனுமதியளிக்கும் என  திரைப்படத் தயாரிப்பாளர்கள் மத்திய அரசின் மீது நம்பிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும் சிலர் ஓடிடி தளத்தில் திரைப்படங்களை ரிலீஸ் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு.! நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விஜய் வாழ்த்து..!!

78,000ஐ தாண்டி உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ் .. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தங்கம் விலை இன்றும் சரிவு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு.. விளக்கமளித்த காவல்துறை..!

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments