Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’நாங்கள் ’ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் : அ.தி.மு.க அமைச்சர் பேச்சு

Webdunia
ஞாயிறு, 28 அக்டோபர் 2018 (16:33 IST)
நாங்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான். பிரிந்து சென்றவர்கள் இப்போது திருப்பி வந்து கொண்டிருக்கிறார்கள் என தமிழகவளர்ச்சித்துறை அமைச்சர்  மஃபா. பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறினார்.


18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளனர்.
 
திடீர் திருப்பமாக, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தாய் கழகத்திற்கு திரும்பி வர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோர் நேற்று கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், அந்த அழைப்பை தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் நிராகரித்துவிட்டனர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் “’பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கழகத்திற்கு திரும்பி வர வேண்டும். நாங்கள் அவர்களுடன் ஈனைந்து செயல்பட தயார். மேலும் இன்னும் ஒரு மாதத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தாயாரா இருக்கிறோம். உலகஅளவில் 2 நாட்களுக்கு ஒருமுறை புதையல் கிடைக்கக் கூடிய இடமாக தமிழகம் உள்ளது” என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

கிறிஸ்துமஸ் தினத்திலும் ஏவுகணை தாக்குதல்.. ரஷ்யா மீது உக்ரைன் குற்றச்சாட்டு..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை: முக்கிய குற்றவாளி கைது..!

முதல்வர் அதிஷி போலி விரைவில் கைது செய்யப்படுவார்: அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments