Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றி நடைபோட்டிட அயராது உழைத்திடுவோம்'-அமைச்சர் உதயநிதி

Sinoj
திங்கள், 8 ஜனவரி 2024 (21:17 IST)
மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறையில் இந்திய ஒன்றியத்தின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. குறிப்பாக மகப்பேறியல் துறையில் தமிழ்நாடு பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது என்று அமைச்சர்  உதய நிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
''மகப்பேறியல் சார்ந்து ரூ.4.60 கோடி மதிப்பீட்டில் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகளின்படி, நம்முடைய சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் அமைந்துள்ள அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனையில், மகப்பேறு மருத்துவ அறைகள் உள்ளிட்ட கட்டுமான வசதிகளை இன்று திறந்து வைத்தோம். 

ALSO READ: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6.6 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு..26 லட்சம் வேலைவாய்ப்பு- முதல்வர்
 
மகப்பேறு மருத்துவ சேவைகளுக்கான PICME 3.0 மென்பொருள் - அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு கால இறப்புகளை தடுக்க உதவிடும் உபகரணங்கள் - அவசர கால மகப்பேறு & குழந்தைகள் பராமரிப்பு மையத்துக்கு தேவையான கருவிகளின் சேவைகளையும் தொடங்கி வைத்தோம். மகப்பேறியல் துறையில்  சிறப்பு பயிற்சி முடித்த செவிலியர்களுக்கு சான்றிதழ்கள் - சேர்க்கை ஆணைகளை வழங்கினோம்.
 
சுகாதாரத்துறையில் தமிழ்நாடு நம்பர் 1 என இன்று போல் என்றும் வெற்றி நடைபோட்டிட அயராது உழைத்திடுவோம்'' என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments