Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய விடியலை காண்போம்: மு.க.ஸ்டாலின் அழைப்பு

புதிய விடியலை காண்போம்: மு.க.ஸ்டாலின் அழைப்பு

Webdunia
ஞாயிறு, 21 பிப்ரவரி 2016 (22:13 IST)
வாருங்கள் புதிய விடியலை காண்போம் என தமிழக மக்களுக்கு திமுக மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
 

 
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அண்ணா திடலில் நடைபெற்ற உறுதி முழக்கப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் கலந்து கொண்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
 
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அண்ணா திடலில் நடைபெற்ற "உறுதி முழக்கப் பேரணி"யில் எனக்கு உற்சாகம் மிகுந்த வரவேற்பு அளித்து பேரன்பு மழையை மக்களும்,கழக தொண்டர்களும் பொழிந்தார்கள். இதற்காக நான் என்றும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.
 
பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்த மண்ணான காஞ்சியில் மகாசமுத்திரமாக திரண்ட மக்கள் முன்பாக உரையாற்றியது எனக்கு கிடைத்த மகத்தான வாய்ப்பாகவே நான் கருதுகிறேன். எல்லா நிலையிலும் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன்.
 
இந்தியாவிலேயே வெளிப்படையான நிர்வாகம் மற்றும் ஊழலற்ற அரசு நடக்கும் முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்றிக் காட்ட நாங்கள் இன்று உறுதிமொழி எடுத்துள்ளோம். விவசாயிகள், நெசவாளர்கள் உள்பட சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை அமையவிருக்கும் திமுக அரசு உருவாக்கி தரும்.
 
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுவதுடன், ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம், சேவைகள் வழங்கும் உத்தரவாத சட்டம் நிறைவேற்றப்படுவதுடன், இளைஞர்களுக்கு 100 % வேலைவாய்ப்பு வழங்கப்படும். வாருங்கள், நாம் அனைவரும் ஒன்றிணைந்து புதிய விடியலை காண்போம் என்றார். 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!