Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை அமைச்சர் திமிர் பேச்சு: தமிழக மீனவர்களின் படகுகளை திருப்பி கொடுக்க மாட்டோம்

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2016 (17:06 IST)
இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை ஒருபோதும் திருப்பி கொடுக்க மாட்டோம் என இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் சமரவீரா நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.


 
 
இலங்கையில் நடைபெற்ற மீன் பண்ணை ஒன்றின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட அந்நாட்டு மீன் வளத்துறை அமச்சர் சமரவீரா தமிழக மீனவர்களின் படகுகளை ஒருபோதும் திருப்பி கொடுக்கமாட்டோம் என திமிராக பேசினார்.
 
மேலும் பேசிய அவர், இலங்கையின் மீன்வளத்தை இந்திய மீனவர்கள் அழித்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார். இந்திய மீனவர்களின் இந்த தொடர் தாக்குதல் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவிடம் எடுத்துக்கூறியதாக தெரிவித்தார்.
 
இது பற்றிய பேச்சுவார்த்தைக்கு சுஷ்மா ஸ்வராஜ் அழைத்துள்ளதாகவும், இந்து பேச்சுவார்த்தைக்கு செல்ல இருக்கும் நாங்கள், இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் என்றார்.
 
மேலும் மீனவர்களிடம் இருந்து பிடித்து வைக்கப்பட்டுள்ள மீன்பிடி சாதனங்கள் மற்றும் படகுகளை ஒருபோதும் திருப்பி கொடுக்கமாட்டோம் என சமரவீரா தெரிவித்தார்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments