Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொள்கையை விட்டுவிட்டு பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி அமைக்க மாட்டோம்- உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேச்சு!

J.Durai
வெள்ளி, 18 அக்டோபர் 2024 (10:16 IST)
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்சக்கர பாணி, நத்தம் சட்டமன்ற தொகுதியில் ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடங்கள், பகுதிநேர நியாயவிலைக்கடைகள் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார்......
 
பிரதமராக மோடி பதவி ஏற்கும் போது தமிழ்நாட்டின் முதல்வர் செல்லவில்லை. மாறாக தமிழ்நாட்டின் தேவைகளுக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கான போதிய நிதியை ஒதுக்க கோரியும் முதல்வர் பிரதமரை சந்தித்து பேசி உள்ளார்.
 
இந்த சந்திப்பால் திமுகவிற்கு பாஜகவிற்கு எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை. மாநிலத்தில் சுயஆட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கையில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்.
 
ஆளுநர் கலந்து கொள்ளும் பட்டமளிப்பு விழாக்களில் இதற்கு முன்னர் அமைச்சர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர் தற்போது கலந்து கொள்கின்றனர்.
 
ஆளுநர் கலந்து கொள்ளும் பட்டமளிப்பு விழாக்களில் இதற்கு முன்னர் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி அவர்கள் கலந்து கொண்டார்.
 
தற்போது உயர்வு கல்வித் துறை அமைச்சராக உள்ள கோவை செழியன் அவர்களும் கலந்து கொண்டுள்ளார்.
 
இதை வைத்து திமுகவும் பாஜகவுக்கும் தொடர்பு இருக்கும் என்று முடிச்சு போட வேண்டாம் என்று பேசினார்.
 
இந்நிகழ்ச்சியிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர்காந்திநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா, துணை இயக்குநர் செல்வக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் விஜயன், நத்தம் பேரூராட்சித் தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமாரவேல்,மகுடபதி, நத்தம் வட்டாட்சியர் விஜயலட்சுமி உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16வது உச்சி மாநாடு: இன்று ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி..!

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்.. மேலும் மூவரை கைது செய்த என்ஐஏ..!

ரேடியோ டவர் மீது மோதிய ஹெலிகாப்டர்.. வெடித்து சிதறியதால் 4 பேர் பலி..!

நிலத்தை அபகரிக்கும் ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல் ஆய்வாளர்: பாதிக்கப்பட்ட நபர் பேட்டி.......

18 வயது இளம் பெண்ணுக்கு புது வாழ்வு.. ரேலா மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments