Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரைமணி நேரத்தில் ஆட்சியை மாற்ற நாங்கள் என்ன குமாரசாமியா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Webdunia
ஞாயிறு, 28 ஜூலை 2019 (17:57 IST)
அரைமணி நேரத்தில் ஆட்சியை மாற்றலாம் என நினைப்பதற்கு நாங்கள் என்ன குமாரசாமியா? என கேள்வி எழுப்பிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 'நாங்கள் நினைத்தால் அரசியலில் இருந்து ஸ்டாலினை வெளியேற்ற முடியும்' என்று ஆவேசமாக பேசினார்.
 
வேலூர் மக்களவை தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில், 'விரைவில் அதிமுக ஆட்சி அகற்றப்படும் என்று வழக்கம்போல் வேலூர் மக்களிடமும் திமுக தலைவர் ஸ்டாலின் உறுதிமொழியை அளித்தார். ஸ்டாலின் கடந்த இரண்டு வருடங்களாக ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கூறிவருவதை கேட்டு மக்களுக்கே சலிப்பு வந்துவிட்ட நிலையில் மீண்டும் அதே வாக்குறுதியை அவர் வேலூரில் கூறியிருப்பது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் இன்று வேலூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 'கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சியை அரை  மணி நேரத்தில் மாற்றியது போல் அதிமுக அரசை மாற்ற முடியாது என்றும், மக்களின் ஆதரவு பெற்ற இந்த ஆட்சி முழு ஐந்து ஆண்டுகள் தொடரும் என்றும், அதே நேரத்தில்  நாங்கள் நினைத்தால் அரசியலில் இருந்து ஸ்டாலினை வெளியேற்ற முடியும்' என்று ஆவேசமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் என்ன பதிலடி கொடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியங்கள் வெற்றி தரும்! - இன்றைய ராசி பலன்கள் (01.04.2025)!

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments