Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 125 அடியை எட்டியது

Webdunia
சனி, 9 ஆகஸ்ட் 2014 (16:03 IST)
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பொழிந்து வருகிறது. இதனால் கடந்த மாதம் 112 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 124.20 அடியாக உயர்ந்தது. இன்று இரவுக்குள் 125 அடி நீர்மட்டம் வந்துவிடும்.
 
நேற்று அணைக்கு 1539 கனஅடி நீர்வந்தது. இன்று 2246-ஆக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 1311 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. இந்த தண்ணீர் முழுவதும் வைகை அணையை வந்து சேருகிறது. எனவே வைகை அணையின் நீர்மட்டம் 44.36 அடியாக கூடியுள்ளது. அணைக்கு 1039 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர் குடிநீருக்குகாக 40 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.
 
இதேபோல மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 29.85 அடியாகவும், சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 47.88 அடியாகவும் உள்ளது.
 
நேற்று பெய்த மழையளவு வருமாறு:-
 
பெரியாறு 34.8 மி.மீ, தேக்கடி 10.6 மி.மீ, கூடலூர் 3 மி.மீ, உத்தமபாளையம் 10 மி.மீ, மஞ்சளாறு 7 மி.மீ, சோத்துப்பாறை அணை 3 மி.மீ தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

Show comments