Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொண்டர்கள் என்ன பிச்சைக்காரர்களா? தூக்கி எறியப்படும் தண்ணீர் பாட்டில்..!

Siva
ஞாயிறு, 27 அக்டோபர் 2024 (13:58 IST)
தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டுக்கு வந்த தொண்டர்களுக்கு நிர்வாகிகள் தண்ணீர் பாட்டிலை தூக்கி எறிந்ததாக கூறப்படும் நிலையில், இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
 
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு ஒரு மாதத்திற்கு முன்பே திட்டமிடப்பட்ட நிலையில், உணவு, குடிநீர் உள்பட அனைத்து பொருட்களும் தொண்டர்களுக்கு சரியாக வழங்கப்பட வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டார்.
 
ஆனால் விஜய்யின் உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்ட நிலையில், தண்ணீர் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து நிர்வாகிகள் தண்ணீர் பாட்டில்களை வரவழைத்து தொண்டர்களுக்கு வழங்கியபோது, தொண்டர்கள் முண்டியடித்ததால் அந்த தண்ணீர் பாட்டில்களை தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது.
 
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகும் நிலையில், “தொண்டர்கள் என்ன பிச்சைக்காரர்களா? ஏன் தூக்கி எறிகிறார்கள்?” என விமர்சனம் செய்யப்படுகிறது. இதுகுறித்து விசாரித்த விஜய் நிர்வாகிகளை கண்டித்ததாகவும் ஒரு செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புகையில்லாத போகி பண்டிகை கொண்டாடுவோம்.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்..!

தேர்தல் வந்தால் பொங்கல் பரிசுத்தொகை:சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!

பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட தயார்: சீமான் பேச்சுகு அண்ணாமலை ஆதரவு!

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments