Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றும் நாளையும் தமிழகத்தில் மழை.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்..!

Mahendran
செவ்வாய், 23 ஜூலை 2024 (15:57 IST)
இன்றும் நாளையும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்யும் என்று புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்று முதல் 27ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மத்திய வடக்கு வங்கக் கடல், வடக்கு ஆந்திரா கடலோர பகுதிகளிலும் சூறைக்காற்று வீசும் வாய்ப்பு இருப்பதால் இந்த பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? இன்னும் சில மணி நேரங்களில் அறிவிப்பு..!

அமெரிக்காவிலிருந்து வந்த மூன்றாவது விமானம்.. இதிலும் பயணிகளுக்கு விலங்கிடப்பட்டதா?

பிளஸ் டூ பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் எப்போது? முக்கிய தகவல்...!

இந்தியாவுக்கு வழங்க திட்டமிடப்பட்ட ரூ.182 கோடி நிதியுதவி நிறுத்தம்.. டிரம்ப் அரசு அறிவிப்பு..!

டெல்லியில் திடீர் நிலநடுக்கம்.. அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடிய பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments