Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு...

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (19:18 IST)
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா மறைந்த நிலையில், அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்  ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பற்றிய அறிவிப்பு கடந்த ஜனவரி 18 ஆம் தேதி வெளியானது.

இதையடுத்து வேட்புமனுதாக்கல் கடந்த பிப்ரவரி 13 ல் தொடங்கி 7 ஆம் தேதி வரை நடந்தது.

பின்னர், காங்கிரஸ் சார்பில், ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில், தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில், மேனகா ஆகியோர் மற்றும் சுயேட்சை வேட்பாளர் என மொத்தம் 77 பேர் போடிய்யிட்டனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், இன்று காலை  முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது.

மொத்தம் 2,27,547வாக்காளர்கள் உள்ள நிலையில், 52 இடங்களில் 238 வாக்குப்பதிவு மையங்களில் இன்று ஓட்டுப்பதிவு நடந்தது.

இதில், மாலை 5 மணி வரை 70.58% வாக்குப்பதிவு நடந்தது.மாலை 6 மணி நிலவரப்படி 74.69 % வாக்குகுகள் பதிவாகியுள்ளது. ஆண்கள் 82,021 ஆண்களும், பெண்கள் 87,907 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் வாக்களித்துள்ளனர். இதன் முடிவுகள் வரும் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments