Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக கலாச்சாரத்தை கடைபிடித்தால் கொரோனா வராது: நடிகர் விவேக்

Webdunia
ஞாயிறு, 8 மார்ச் 2020 (10:38 IST)
தமிழர்களின் முக்கிய கலாச்சாரம் ஒன்றை கடைபிடித்தால் தமிழர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாது என்று நடிகர் விவேக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது 
 
கொரோனா வைரஸ் என்பது உலகம் முழுவதும் அதிகரித்து வரும் ஒரு வைரஸ். ஆனால் அதே நேரத்தில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அதிக வெப்ப நிலை இருப்பதால் கொரோனா வைரஸ் தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு மிகவும் குறைவு
 
இருப்பினும் நாம் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக தமிழர்களின் கலாச்சாரமான கையெடுத்து கும்பிட்டு வணக்கம் செலுத்துதல் என்ற முறையை கடைபிடிக்க வேண்டும். பிறரை நாம் சந்திக்கும் போது அவருக்கு கை கொடுக்காமல் தமிழர்களின் கலாச்சாரமான கும்பிட்டு வணக்கம் செலுத்தினால் கொரோனா வைரஸில் இருந்து எளிதில் தப்பிக்கலாம்
 
மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க அனைவரும் அடிக்கடி சோப்பு போட்டு கைகழுவ வேண்டும். மேலும் தும்மல் அல்லது இருமல் வந்தால் கர்சீப் வைத்து வாயையும் மூக்கையும் பொத்திக் கொண்டு இரும வேண்டும் அவ்வாறு செய்தால் பாதுகாப்புடன் இருக்கலாம். மேலும் தும்மல் அல்லது இருமல் அடிக்கடி வரும் நபரின் பக்கத்தில் செல்ல கூடாது. அவரை உடனடியாக மாஸ்க் அணியும்படி அறிவுறுத்த வேண்டும் என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments