ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட வேண்டும். மேலும், பீட்டா நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என தமிழகம் எங்கும் உள்ள கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், ஐ.டி. ஊழியர்கள் என பலரும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக அமைதியான வழியில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற போராட்டம் தற்போது தமிழகமெங்கும் தீவிரமடைந்துள்ளது. ஆண்கள் மட்டுமே போராடி வந்த இந்த போராட்டங்களில் தற்போது ஏராளமான இளம் பெண்களும் கலந்து கொண்டு போராடி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த போராட்டங்களின் போது நடந்த நெகிழ்ச்சியான சம்பவங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அது பற்றி இங்கு காண்போம்.
அலங்காநல்லூர் போராட்டகளத்தில் ஸ்வேதா என்ற சிறுமி, ஜல்லிக்கட்டிற்காக குரல் கொடுத்து வருகிறாள். ஸ்வேதாவின் புகைப்படம் தற்போது பலரின் முகநூல் புகைப்படமாக மாறியுள்ளது.
ஒரு பெண்மணி, இரவு வேளை என்றும் பாராமல் தங்களின் இரு குழந்தைகளோடு போராட்டத்தில் ஈடுபடும் காட்சி...
சென்னை மெரினா கடற்கரையில் போராடிய மாணவனுக்கு காலில் அடிபட்டு விட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல் அதிகாரி ஒருவர், அந்த மாணவருக்கு கட்டு போடும் காட்சி.
ஒரு சிறுவனின் கையில் பிடித்திருக்கும் பாதகை....
திருமணம் முடிந்த கையோடு போராட்ட களத்திற்கு வந்து கலந்து கண்ட திருமண தம்பதி...