Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை: எஸ்பி அதிரடி உத்தரவு

Webdunia
ஞாயிறு, 5 ஜூலை 2020 (07:41 IST)
பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை:
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் ஐவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த விவகாரத்தில் சில பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களையும் கைது செய்து தீவிர விசாரணை செய்து தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்றும் குரல்கள் ஓங்கி ஒலித்து வருகிறது. ஆனால் இதற்கு பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது 
 
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் காவல் பணியில் ஈடுபட பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட எஸ்பி ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளார்கள். சமூகப் பணிகளுக்கு மட்டுமே பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பயன்படுத்தபடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 
 
சாத்தான்குளம் தந்தை மகன் விவகாரத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் சிக்கியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. விழுப்புரம் மாவட்டத்தை அடுத்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதே போன்ற நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பில் பணிபுரியும் இளைஞர்கள், போலீஸ் போலவே அத்துமீறலில் ஈடுபட்டு இருப்பதாக குற்றம்சாட்டி வரும் நிலையில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்பதையே கலைக்க வேண்டும் என்ற குரலும் ஓங்கி வரும் நிலையில்,விழுப்புரம் எஸ்பி இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மதியம் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் - மக்கள் கவனத்திற்கு சில முக்கிய விவரங்கள்..!

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments