Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாற்றுத்திறனாளி குழந்தைக்கு வீடு வழங்கிய-தமிழக வெற்றிக்கழகம்!

J.Durai
செவ்வாய், 18 ஜூன் 2024 (21:57 IST)
தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை  துவங்கி உள்ள நடிகர் விஜய்  தொடர்ந்து  நலத்திட்ட உதவிகள் செய்வதில் கவனம் செலுத்த துவங்கி உள்ளார்.
 
அவரது  கட்டளைக்கு இணங்க தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை தெற்கு மாவட்ட இளைஞரணியினர்,
இலவச படிப்பகம்,குருதி கொடை முகாம்,சாலையோர மக்களுக்கு குளிர் கால போர்வை மற்றும் உணவு  வழங்குவது  போன்ற மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
 
இந் நிலையில்  தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டம் மூலம் கோவை சுந்தராபுரம் கோண்டி காலனி எனும் பகுதியில் ஒரு  பயனாளிகளுக்கு வீடு கட்டி  கொடுத்து,அரிசி, மளிகை என  வீட்டு உபயோகப்பொருட்களையும் வழங்கியுள்ளனர்.
 
இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தேசிய செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பயனாளியிடம் வீட்டின் சாவியை வழங்கி, வீட்டிற்கு தேவையான பொருட்களையும் வழங்கினார்.
 
மாற்றுத்திறனாளி குழந்தையை வைத்துள்ள அந்த குடும்பத்தினருக்கு சரியான ஒரு இடம் இல்லாததால் தவித்து வந்த நிலையில், களத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்த,தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பாபு,உடனடியாக தனது நிர்வாகிகள் உதவியுடன் சுமார் ஒன்றரை இலட்சம் மதீப்பீட்டில் இலவச வீட்டை வழங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments