Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் போட்டியிடும் விஜயகாந்த் மகன் ! தொண்டர்கள் மகிழ்ச்சி

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (17:36 IST)
விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக தனித்துப் போட்டியிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் போட்டியிட விரும்பல மனு அளித்துள்ளார்.
 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
 
இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம்
 
பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்நிலையில் தேமுதிக தலைவர் உடல்நலக்குறைவுடன் இருந்தாலும் தன் கட்சிக்கான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். எனவே, அக்கட்சிக்கு தேவையான தொகுதிகளை அதிமுக ஒதுக்குவதில் தொடர்ந்து இழுபறி இருப்பதாகத் தெரிகிறது. ஏற்கனமே பாமகவுக்கும் தேமுதிகவுக்கும் பொருந்திப்போகாத நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலைபோலவே இருகட்சிகளும் அதிமுககூட்டணியில் உள்ளது.
 
அதேசமயம் தேமுதிகவுக்கு கௌரவமான தொகுதிகள் ஒதுக்காத பட்சத்தில் எதிர்க்கட்சியாக இருந்த அக்கட்சிக்கு பெரும் கவுரவ குறைச்சல் உண்டாகும் என் நினைப்பதுபோல் தெரிகிறது. இதற்கான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வந்த நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை ரத்தாகியுள்ளது.
 
அதிமுக -தேமுதிக ஆகிய கட்சிகள் பங்கீடு குறித்து சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மாலை 6:30 மணிக்கு அதிமுகவினருடன் தேமுதிகவினர் நடந்த இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments