Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கவில்லை - சர்ச்சையில் சிக்கிய காஞ்சி விஜயேந்திரர்

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (11:35 IST)
சென்னையில் நடந்த ஒரு விழாவில் தமிழ்தாய் வாழ்த்து பாடிய போது, காஞ்சி விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் உட்கார்ந்திருந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ் - சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், ஆளுநர் பன்வாரிலால் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். விழாவின் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது, ஆளுநர் உட்பட அனைவரும் எழுந்து நின்றனர். ஆனால், இந்த விழாவில் கலந்து கொண்ட காஞ்சி இளைய மடாதிபதி விஜேயேந்திர சரஸ்வதி மட்டும் எழுந்து நிற்காமல் தனது இருக்கையிலேயே அமர்ந்திருந்தார்.

ஆனால், விழா முடிந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செய்தார். விஜயேந்திரரின் இந்த செயல் அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
இதன் மூலம் அவர் தமிழை அவமரியாதை செய்து விட்டார் எனவும், இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ஆண்டாள் விவகாரத்தை கையில் எடுத்து வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என போர்க்கொடி பிடித்த ஹெச்.ராஜா மற்றும் இந்து அமைப்பினர் விஜேந்திரரை மன்னிப்பு கேட்ப சொல்வார்களா? எனவும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

புயல், கனமழையால் பாதிப்பா? உதவி எண்களை அறிவித்த பேரிடர் மேலாண்மை ஆணையம்..!

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments