தளர்வு என்பதால் அலட்சியம் வேண்டாம்… விஜயகாந்த் வேண்டுகோள்!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (11:28 IST)
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அலட்சியம் காட்டவேண்டாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஊரடங்கு உத்தரவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் வழிபாட்டுத்தலங்கள் வணிக வளாகங்கள் போன்ற பகுதிகளில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் முகக்கவசம் அணிந்து அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்காமல் அலட்சியம் காட்டினால் கரோனா வைரஸ் கர்ப்பப்பை போன்ற தொற்று நோய்கள் அதிக அளவில் பரவி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஊரடங்கு தளர்வு மக்கள் நன்கு புரிந்து கொண்டு பாதுகாப்புடன் இருப்பதுடன் அனைவரையும் பாதுகாத்திட வேண்டும். மக்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து டெல்டா போன்ற வைரஸ் தொற்று பரவாமல் தவிர்க்க ஒவ்வொருவரும் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும். போதை தடுப்பு ஊசி இன்றி மக்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு தடுப்பூசி பற்றாக்குறையை போக்க மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தளங்களில் அலட்சியம் காட்டினால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டது. உடன் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தொழில் முடங்கி, வேலை வாய்ப்பின்றி வருமானம் வெளிவந்து மிகப்பெரிய ஒரு பிரச்சனையை மக்கள் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படக்கூடும். எனவே தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதுவே வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சேர்ந்துட்டோம்!.. அண்ணன் தம்பியா செயல்படுவோம்!.. டிடிவி தினகரன் ஃபீலிங்...

டிடிவி தினகரன் கூட சேர்ந்ததில் எந்த சங்கடமும் இல்லை!.. பழனிச்சாமி விளக்கம்!...

வங்கி வேலை நிறுத்தம் அறிவிப்பு!.. 3 நாட்களுக்கு வங்கி சேவை பாதிக்கும்!...

ஷிம்ஜிதா எடுத்த 7 வீடியோ!.. ஜாமின் வழங்க போலீஸ் எதிர்ப்பு!...

திமுக அரசு ஒரு Trouble Engine!.. ஸ்டாலின் கமெண்ட்டுக்கு தமிழிசை பதிலடி!...

அடுத்த கட்டுரையில்
Show comments